இந்தியா-சீனா ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும்: அதிபர் ஷி ஜின்பிங்
+2, டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு இந்திய கப்பற்படையில் பணி - எப்படி விண்ணப்பிக்கலாம்?
இந்திய கப்பற்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.
என்ன பணி?
அக்னிவீரர்கள் பணி. இது நான்கு ஆண்டு பணி ஆகும்.
குறிப்பு: திருமணமாகாத ஆண் மற்றும் பெண் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
வயது வரம்பு: அக்னிவீரர்கள் 02/2025 பேட்சிற்கு செப்டம்பர் 1, 2004 - பிப்ரவரி 29, 2008-க்குள் பிறந்திருக்க வேண்டும்.
அக்னிவீரர்கள் 01/2026 பேட்சிற்கு பிப்ரவரி 1, 2025 - ஜூலை 31, 2008-க்குள் பிறந்திருக்க வேண்டும்.
அக்னிவீரர்கள் 02/2026 பேட்சிற்கு ஜூலை 1, 2005 - டிசம்பர் 31, 2008-க்குள் பிறந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.30,000

கல்வி தகுதி: கணிதம் மற்றும் இயற்பியல் கொண்ட பிரிவில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் அல்லது இன்ஜினீயரிங்கில் மூன்று ஆண்டுகள் டிப்ளமோ படிப்பு அல்லது கணிதம் மற்றும் இயற்பியல் கொண்ட இரண்டாண்டு தொழிற்படிப்பு
எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
நுழைவு தேர்வு, எழுத்து தேர்வு, மருத்துவ சோதனை.
விண்ணப்பிக்கும் இணையதளம்:www.joinindiannavy.gov.in
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: ஏப்ரல் 10, 2025
மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.