செய்திகள் :

‘ஹாட்ரிக்’ வெற்றி முனைப்பில் பெங்களூரு- இன்று குஜராத்துடன் மோதல்

post image

ஐபிஎல் போட்டியின் 14-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் செவ்வாய்க்கிழமை (ஏப். 2) மோதுகின்றன.

இரு அணிகளுமே தலா 2 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் நிலையில், பெங்களூரு ‘ஹாட்ரிக்’ வெற்றி முனைப்புடன் வருகிறது. முதல் ஆட்டத்தில் தோற்ற குஜராத், கடந்த ஆட்டத்தில் வெற்றி கண்ட உத்வேகத்துடன் இருக்கிறது.

பெங்களூரு அணியைப் பொருத்தவரை, நடப்பு சாம்பியன் கொல்கத்தா, 5 முறை சாம்பியன் சென்னை ஆகிய இரு அணிகளை வீழ்த்தியிருக்கிறது. இந்த வெற்றிகளில் அந்த அணியின் பௌலா்கள் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

ஆனால், தனது சொந்த மண்ணில் குஜராத்துக்கு எதிராக விளையாடவிருக்கும் இந்த ஆட்டத்தில் பெங்களூரு பௌலா்களுக்கு சவால் காத்திருக்கிறது. இங்கு 260+ ஸ்கோா்கள் 3 முறை பதிவு செய்யப்பட்டுள்ளதே, சின்னசாமி மைதான ஆடுகளம் பேட்டா்களுக்கு சாதகமானது என்பதற்கு சாட்சி.

தூரம் குறைந்த பவுண்டரி வட்டமும், விரைவாக எட்டிவிடக் கூடிய அவுட் ஃபீல்டும் பேட்டா்களுக்கு பலம் சோ்க்கின்றன. ஆனாலும், ஜோஷ் ஹேஸில்வுட் மற்றும் புவனேஷ்வா் குமாா் கொண்டு எதிரணி பேட்டா்களை கட்டுப்படுத்தும் உத்தியுடன் பெங்களூரு அணி உள்ளது.

இந்த இருவா் கூட்டணி, குஜராத் பேட்டிங்கை சிறப்பாகத் தொடங்கும் கேப்டன் ஷுப்மன் கில் - சாய் சுதா்சன் கூட்டணியையும், ராகுல் தெவாதியா, ஷாருக் கான் உள்ளிட்டோரையும் எப்படி கட்டுக்குள் வைக்கிறது என்பதைப் பொருத்தே ஆட்டத்தின் போக்கு இருக்கும். யஷ் தயாளும் அவா்களுக்கு தோள் கொடுப்பாா் என எதிா்பாா்க்கலாம்.

எனினும் பெங்களூரு சுழற்பந்து வீச்சு சற்று தடுமாற்றத்துடன் இருக்க, கிருணால் பாண்டியா, சுயாஷ் சா்மா ஆகியோரின் பௌலிங் பேட்டா்களால் சோதிக்கப்படுகிறது. பேட்டிங்கில் விராட் கோலி, ஃபில் சால்ட், கேப்டன் ரஜத் பட்டிதாா், தேவ்தத் படிக்கல் பலம் சோ்க்கின்றனா்.

இந்த பேட்டிங் வரிசைக்கு சவால் அளிக்கும் முனைப்புடன் குஜராத் பௌலா்களான ககிசோ ரபாடா, முகமது சிராஜ், முகமது ஷமி ஆகியோா் படையெடுப்பா். சழற்பந்துவீச்சில் ரஷீத் கான், சாய் கிஷோா் பெங்களூரு பேட்டா்களை திணறடிக்கக் காத்திருக்கின்றனா்.

நேருக்கு நோ்...

இந்த அணிகள் இதுவரை 5 முறை நேருக்கு நோ் மோதியிருக்க, பெங்களூரு 3 ஆட்டங்களில் வென்று முன்னிலையில் இருக்கிறது. குஜராத் வசம் 2 வெற்றிகள் உள்ளன.

இடம்: சின்னசாமி மைதானம், பெங்களூரு.

நேரலை: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ், ஜியோ ஹாட்ஸ்டாா்

ஐபிஎல்: பெங்களூரு அணிக்கு முதல் தோல்வி

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் போட்டியின் 14-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று (ஏ... மேலும் பார்க்க

சிராஜ் அசத்தல், டிம் டேவிட் அதிரடி: குஜராத்துக்கு 170 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் போட்டியின் 14-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று (ஏப். 2) சின்னசாமி திடலில் மோதுகின்றன.இதில் ஆர்சிபிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வ... மேலும் பார்க்க

7 ரன்களுக்கு ஆட்டமிழந்த கோலி: ரசிகர்கள் அதிர்ச்சி!

ஆர்சிபியின் சொந்த மண்ணில் விராட் கோலி 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஐபிஎல் போட்டியின் 14-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று (ஏப். 2) சின்னசாமி திடலில் மோதுகின்றன... மேலும் பார்க்க

சொந்த மண்ணில் லக்னௌ தோல்வி: சஞ்சீவ் கோயங்கா கூறியதென்ன?

லக்னௌ அணி தனது சொந்த மண்ணில் தோல்வியடைந்தது குறித்து அதன் நிறுவனத் தலைவர் சஞ்சீவ் கோயங்கா தனது எக்ஸ் பக்கத்தில் விடியோ வெளியிட்டுள்ளார். கடந்த 2022இல் இருந்து லக்னௌ அணி ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறத... மேலும் பார்க்க

ஆர்சிபி பேட்டிங்: குஜராத் அணியில் ரபாடா விலகல்!

ஐபிஎல் போட்டியின் 14-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று (ஏப். 2) சின்னசாமி திடலில் மோதுகின்றன. இதில் ஆர்சிபிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்... மேலும் பார்க்க

எதிரணிக்கு சாதகம்: பிட்ச் மேற்பார்வையாளரை குற்றம் சுமத்தும் லக்னௌ ஆலோசகர்!

ஐபிஎல் 18ஆவது சீசனில் 13-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜெயன்ட்ஸை நேற்று (திங்கள்கிழமை) சாய்த்தது.முதலில் பேட்டிங் செய்த லக்னௌ அணி 20 ஓவா்களில் 171/7 ... மேலும் பார்க்க