தில்லியில் பட்டாசுகள் மீதான தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
ஐபிஎல்: பெங்களூரு அணிக்கு முதல் தோல்வி
பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் போட்டியின் 14-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று (ஏப். 2) சின்னசாமி திடலில் விளையாடின. இதில் ஆர்சிபிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 169 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது.
விராட் கோலி 7 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் ரஜத் படிதார் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆர்சிபி அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் சொதப்பினாலும் லிவிங்ஸ்டன் ஒருபுறம் பொறுமையாக விளையாடி அரைசதம் (54) அடித்தார். இறுதியில் டிம் டேவிட் அதிரடியாக விளையாடி 18 பந்துகளில் 32 ரன்கள் குவித்தார்.
சொந்த மண்ணில் லக்னௌ தோல்வி: சஞ்சீவ் கோயங்கா கூறியதென்ன?
குஜராத் டைட்டன்ஸ் சார்பில் முகமது சிராஜ் 3, சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். ரஷித் கான் மிகவும் மோசமாக பந்துவீசி 4 ஓவர்களில் 54 ரன்களை விட்டுக்கொடுத்தார். 170 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய குஜராத் அணியில் ஷுப்மன் கில், சாய் சுதர்சன் ஆகியோர் களமிறங்கினர்.
கேப்டன் கில் 14 ரன்களில் வெளியேற ஜாஸ் பட்லர் களம் கண்டார். சாய் சுதர்சன் - ஜோஸ் பட்லர் ஜோடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சாய் சுதர்சன் 49 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு புறம் ஜோஸ் பட்லர் அரைசதம் கடந்து அசத்தினார்.
அடுத்து வந்த ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட்டும் பட்லருக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். 17.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து குஜராத் அணி வெற்றி இலக்கை எட்டியது. அதிரடியாக விளையாடிய பட்லர் 39 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேபோல் ரூதர்ஃபோர்ட்டும் 18 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் இருந்தார்.