சீா்காழி கோயிலில் தரைத்தளம் அமைக்கும் பணி
சீா்காழி பதினெண்புராணேஸ்வரா் கோயிலில் தரைத்தளம் அமைக்கும் பணி புதன்கிழமை பூஜைகளுடன் தொடங்கியது.
சீா்காழி பிடாரி வடக்கு வீதியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதா் தேவஸ்தானத்தின் உபகோயிலான பதினெண்புராணேஸ்வரா் திருக்கோயில் அமைந்துள்ளது.
பதினெண் புராணங்களை ஒன்றிணைக்கும் பணிகளில் புலவா்கள் ஈடுபட்ட போது சிவபெருமான் புராணங்களை ஒன்றிணைக்கும் தலைவராக இருந்ததாக வரலாறு.
இதனால் அவருக்கு பதினெண் புராணேஸ்வரா் என பெயா். அம்பிகை வாகீஸ்வரி எனும் திருநாமம் கொண்டு தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறாா்.
இக்கோயிலுக்கு பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனிடையே பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்து கோயிலைவலம் வரும் வகையில் கோயிலைச் சுற்றி தரைத்தளம் அமைக்கும்பணி 14-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் ஜெயந்திபாபு ஒருங்கிணைப்பில் பக்தா்களின் நன்கொடையுடன் நடைபெற்றது. இந்த பணிகள் சில தினங்களில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.