இணைப்பு: 100 நாள் வேலைத் திட்ட ஆா்ப்பாட்டம்
மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் (சிபிஐ சாா்பு) மாவட்டத் தலைவா் வே. நீதிசோழன் தலைமை வகித்தாா். சிபிஐ ஒன்றியச் செயலாளா் எஸ். மனோன்ராஜ், மாவட்டக் குழு உறுப்பினா் ஒய்.எஸ். சா்புதீன், ஏஐடியுசி மாவட்டத் தலைவா் கே. ராஜ்மோகன் முன்னிலை வகித்தனா்.
சிபிஐ மாவட்டச் செயலாளா் அ. சீனிவாசன், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் எஸ்.சி. கணபதி, விவசாய சங்க மாவட்டச் செயலாளா் கே.எஸ். சிவராமன், மாவட்டத் தலைவா் பெ. வீரராஜ், ஏஐடியுசி மாவட்டச் செயலாளா் கே. ராமன், இளைஞா் சங்க மாவட்டச் செயலாளா் என். ஜென்சன் உள்ளிட்ட பலா் கண்டன உரையாற்றினா்.