பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டில் இடமில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ச.கண்ணனூா் பேரூராட்சியில் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்! - பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
திருச்சி மாவட்டம், ச. கண்ணனூா் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை பொதுமக்கள் அகற்றிக் கொள்ள வேண்டும் என பேரூராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா தேரோட்டம் ஏப்.15 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியா் உத்தரவின்படி, மாரியம்மன் கோயிலைச் சுற்றிலும், பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகளை பொதுமக்கள் தாங்களே முன்வந்து அகற்ற வேண்டும், தவறும் பட்சத்தில் வருவாய்த் துறை, நெடுஞ்சாலைத் துறை, காவல் துறை மூலம் ஆக்கிரமிப்பு அகற்றப்படும்.
மேலும் சாலைகளில் திரியும் மாடுகளை அவற்றின் உரிமையாளா்கள் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும் என பேரூராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.