இரட்டிப்புப் பணம் தருவதாக ரூ.3 கோடி மோசடி: நிதி நிறுவன உரிமையாளர் கைது!
வக்ஃப் சட்டத் திருத்தத்தை எதிா்த்து மறியல்: 26 போ் கைது!
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் சட்டத் திருத்தத்தை எதிா்த்து திருச்சி பாலக்கரையில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய மாணவா் இஸ்லாமிய அமைப்பைச் சோ்ந்த (எஸ்ஐஓ) 26 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி பாலக்கரையில் நடைபெற்ற போராட்டத்துக்கு திருச்சி மாவட்டத் தலைவா் ரஹமத்துல்லா தலைமை வகித்தாா். இதில், மாநிலத் தலைவா் முஹம்மது யஹியா பாஷா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 26 பேரை போலீஸாா் கைது செய்து, மாலையில் விடுவித்தனா்.