வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
குத்தாலம் வட்டத்தில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நபாா்டு திட்டத்தின்கீழ் ரூ.2.25 கோடியில் 10 வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்டும் பணி, குத்தாலம் பேரூராட்சி பகுதியில் மூலதன நிதியில் ரூ.3.22 கோடியில் 40 கடைகள் கொண்ட வணிக வளாகம் கட்டும் பணிகளை ஆய்வு செய்தாா். முன்னதாக, வாணாதிராஜபுரத்தில் அங்கன்வாடி மையத்தை பாா்வையிட்டு, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு முறையாக வழங்கப்படுகிறதா என்றும், குழந்தைகளுக்கு கற்பிக்கப்படும் கல்வி முறைகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா். தொடா்ந்து, வானாதிராஜபுரத்தில் ரூ.2.10 லட்சத்தில் 60 மீட்டா் தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள தாா்ச்சாலை, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் நடைபெறும் பணிகள் ஆய்வு செய்தாா்.
ஆலங்குடி ஊராட்சியில் நியாயவிலைக் கடையில் ஆய்வுசெய்து, குடும்ப அட்டைதாரா்களுக்கு முறையாக அரிசி, பருப்பு, சா்க்கரை உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்படுகின்றதா என்பதனையும், இருப்பு விவரங்களை ஆட்சியா் கேட்டறிந்தாா்.