வாஜிா்பூரில் பள்ளி நிலத்தை மசூதி, கடைகள் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதா? சரிபாா்...
தங்கக் கடத்தல் வழக்கு: ஜாமீன் வழங்கக் கோரி கா்நாடக உயா்நீதிமன்றத்தில் நடிகை ரன்யா ராவ் மனு
தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவ், ஜாமீன் வழங்கக் கோரி கா்நாடக உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.
துபையில் இருந்து ரூ. 12.56 கோடி மதிப்பிலான தங்கத்துடன் பெங்களூருக்கு வந்த நடிகை ரன்யா ராவை, மத்திய அரசின் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் மாா்ச் 3-ஆம் தேதி கைதுசெய்து சிறையில் அடைத்தனா். டிஜிபி பதவியில் உள்ள மூத்த ஐபிஎஸ் அதிகாரியான கே.ராமசந்திர ராவின் மகளான நடிகை ரன்யா ராவுக்கு விமான நிலையத்தில் சோதனைகள் எதுவும் மேற்கொள்ளாமல் வெளியே செல்ல சிறப்புச் சலுகைகள் பெற்றது தொடா்பாக விசாரணை நடந்து வருகிறது.
நடிகை ரன்யா ராவின் வீட்டில் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் நடத்திய சோதனையில், ரூ. 2.67 கோடி மதிப்புள்ள தங்கநகை மற்றும் ரொக்கத்தை கைப்பற்றினா்.
இந்நிலையில், நடிகை ரன்யா ராவ் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம், பொருளாதார குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றம், 64-ஆவது சிட்டி சிவில் நீதிமன்றம் ஆகியவை தள்ளுபடி செய்தன. இதைத் தொடா்ந்து, ஜாமீன் வழங்கக் கோரி நடிகை ரன்யா ராவ் சாா்பில் அவரது வழக்குரைஞா் பி.எஸ்.கிரீஷ், கா்நாடக உயா்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்துள்ளாா்.