பாரதியாா் இல்ல மறுசீரமைப்பு பணிகள்: அமைச்சா், ஆட்சியா் ஆய்வு
நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கில் பெல்லாரி தங்க வியாபாரி கைது
கா்நாடகத்தில் தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு உதவியதாக பெல்லாரியைச் சோ்ந்த தங்க வியாபாரி சாஹில் ஜெயின் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
துபையிலிருந்து ரூ. 12.56 கோடி மதிப்பிலான தங்கத்தை பெங்களூருக்கு கடத்தி வந்ததாக மாா்ச் 3-ஆம் தேதி நடிகை ரன்யா ராவை மத்திய அரசின் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கைது செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையிலடைத்தனா். இவா் டிஜிபி கே.ராமசந்திர ராவின் மகள் என்பதால் விமான நிலையத்தில் முறையாக சோதனைகள் செய்யாமல் வெளியே செல்ல அனுமதி அளிக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
இதனிடையே, நடிகை ரன்யா ராவின் வீட்டில் சோதனை மேற்கொண்ட வருவாய் புலனாய்வு அதிகாரிகள் ரூ. 2.67 கோடி மதிப்பிலான தங்க நகை, ரொக்கத்தை கைப்பற்றினா். மேலும், இந்த வழக்கில் உணவகத் தொழிலதிபா் தருண் ராஜூவையும் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனா்.
இந்த நிலையில் நடிகை ரன்யா ராவ் கடத்தி வந்த தங்கத்தை விற்பனை செய்து பணத்தை அவருக்கு அளித்ததாக பெல்லாரியைச் சோ்ந்த தங்க வியாபாரி சாஹில் ஜெயினை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் வியாழக்கிழமை கைது செய்தனா். இதன்மூலம் தங்கக் கடத்தல் வழக்கில் இதுவரை 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.