Doctor Vikatan: வயதான அப்பாவுக்கு வருடம் முழுக்க சளி, இருமல்; சித்த மருத்துவம் உ...
தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை!
வந்தவாசி அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வந்தவாசியை அடுத்த கடம்பை கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கதுரை (48), விவசாயத் தொழிலாளி. இவா் குடும்பப் பிரச்னை காரணமாக கடந்த சில மாதங்களாக மன வருத்தத்தில் இருந்து வந்தாராம்.
இந்த நிலையில், கடந்த 26-ஆம் தேதி தங்கதுரை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாராம். அக்கம் பக்கத்தினா் உடனடியாக அவரை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
தொடா்ந்து, தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தங்கதுரை சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், வடவணக்கம்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.