பிரதமருக்கு இலங்கையின் உயரிய விருது! திருக்குறள் மூலம் நன்றி சொன்ன மோடி!!
பாம்பன் பாலம் திறப்பு: பிரதமரின் நாளைய நிகழ்ச்சி நிரல்!
பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி, நாளை தமிழகம் வருகைதர உள்ளார்.
பாம்பன் ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த டிசம்பர் மாதமே நிறைவுபெற்றது. பிரதமரின் தேதிக்காக திறப்பு விழா தள்ளிப்போன நிலையில், வருகின்ற 6 ஆம் தேதி பிரதமர் மோடியால் திறந்துவைக்கப்படவுள்ளது.
இலங்கைக்கு ஒருநாள் பயணமாக வெள்ளிக்கிழமை சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்து நேரடியாக ராமநாதபுரம் வருகை தந்து பாம்பன் பாலத்தை திறந்துவைக்கவுள்ளார். இலங்கையில் இருந்து ஹெலிகாப்டரில் மண்டபத்தில் நாளை காலை 11:50 மணியளவில் வந்திறங்கும் பிரதமர் மோடி, பின்னர், அங்கிருந்து காரில் புறப்பட்டு பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் அமைத்துள்ள மேடைக்கு சென்று புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார்.
ராமேசுவரம் - தாம்பரம் ரயில் போக்குவரத்தை கொடியசைத்து துவக்கி வைத்தபின், ராமநாதசுவாமி கோயிலுக்கும் செல்லவுள்ளார். தொடர்ந்து, ராமேசுவரம் பேர்ந்து நிலையம் அருகில் உள்ள அரசு தங்கும் விடுதி வளாகத்தில் பாம்பன் பாலம் திறப்பு விழா நிகழ்ச்சியில் உரையாற்றுவார். இதனையடுத்து, மதியம் 2 மணியளவில் மண்டபத்தில் இருந்து மதுரைக்கு ஹெலிகாப்டரில் செல்கிறார். பாம்பன் பாலம் திறப்பு விழாவில் பிரதமரின் வருகையை முன்னிட்டு, ராமேசுவரம் முதல் மண்டபம்வரையில் 4,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
பிரதமர் வருகையையொட்டி, ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏப்ரல் 4 முதல் 6 வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத் துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில், பாம்பன் கடல் பகுதியில் 2.2 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாலம் கடந்த 1914-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
இந்தப் பாலம் 106 ஆண்டுகள் கடந்த நிலையில், அதன் உறுதித்தன்மை குறைந்ததால், ரூ. 550 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கி 2024 இறுதியில் நிறைவுபெற்றது.
இதையும் படிக்க:ஊழியர்களின் கைகளில் ரத்தக் கறை: மைக்ரோசாஃப்ட் ஆண்டுவிழாவில் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்