செய்திகள் :

கேரளத்தில் பாஜக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: அமைச்சர்

post image

கேரள மாநிலத்தில் அடுத்தாண்டு நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் எம்.பி. ராஜேஷ் கூறினார்.

தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், இடது ஜனநாயக முன்னணி கட்சி மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி(யுடிஎஃப்) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான எல்டிஎஃப்-க்கு முக்கிய எதிரியாக இருந்தாலும், பாஜக மாநிலத்தில் தனது பலத்தை விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. மேலும் நடிகராக மாறிய அரசியல்வாதி சுரேஷ் கோபி கடந்த மக்களவைத் தேர்தலில் திருச்சூர் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார்.

சிபிஐ(எம்) ஆலத்தூர் தொகுதியில் மட்டுமே வெல்ல முடிந்தது, மீதமுள்ள இடங்களை யுடிஎஃப் கைப்பற்றியது.

கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 19 சதவீத வாக்குகளைப் பெற்றது, அதே நேரத்தில் எல்.டி.எஃப் 33 சதவீதமாக இருந்தது, இதுவே 2019 தேர்தலில் 36 சதவீதமாக இருந்தது, அதே நேரத்தில் யு.டி.எஃப்45 சதவீதமாகவும், 2019-ல் 47 சதவீதமாக இருந்தது. இருப்பினும், மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சி, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று ராஜேஷ் கூறினார்.

அதேபோன்று பாஜகவும் கேரளத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. இது கேரளத்தில் பாஜகவுக்கு மிகப்பெரிய தேர்தல் பின்னடைவாக இருக்கும் என்று ராஜேஷ் கூறினார்.

2034-இல் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை அமல்! - நிர்மலா சீதாராமன்

ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறை 2034-ஆம் ஆண்டு அமலாகும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து சென்னை அருகேயுள்ள கட்டாங்குளத்தூரில் உள்ளதொரு தனியார் ... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜெயின் துறவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

ஜெயின் துறவி சாந்திசாகருக்கு பாலியல் வன்கொடுமை வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தின் சூரத் நகரிலுள்ள திமாலியாவாத் பகுதியிலிருக்கும் ஜெயின் ஆலயத்தில் துறவியாக இருந... மேலும் பார்க்க

2,800 கைதிகளுக்கு ஒரே மருத்துவர்: ஹரியாணா சிறையின் அவலநிலை!

ஹரியாணாவில் உள்ள சிறையில் 2,800-க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு ஒரே மருத்துவர் என்ற நிலை உள்ளது. ஹரியாணா மாநிலத்தின் குருகிராம் நகரில் உள்ள போன்ட்சி சிறையில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்புக் கண்கா... மேலும் பார்க்க

விலைவாசி உயர்வின் பிதாமகன் பாஜக! -கர்நாடக காங். விமர்சனம்

கர்நாடகத்தில் விலைவாசி உயா்வைக் கண்டித்து அம்மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியான பாஜக போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதனை விமர்சித்துள்ள அம்மாநில துணை முதல்வர் டி. கே. சிவக்குமார், விலைவாசி உயர்வின் பி... மேலும் பார்க்க

வலுக்கும் எதிர்ப்பு! வஃக்ப் மசோதாவுக்கு எதிராக 3-ஆவது மனு தாக்கல்!

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 3-ஆவது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இம்மசோதாவை அரசமைப்புச் சட்டத்தின்கீழ் செல்லாது என்று அறிவிக்கக் கோரி, காங்கிரஸ் எம்.பி. முகமது ஜாவத், மஜ... மேலும் பார்க்க

மீரட் கொலைச் சம்பவம்: குழந்தைக்கு உரிமை கோரும் குடும்பங்கள்

மீரட்: முன்னாள் விமானப் படை வீரர் சௌரவ் ராஜ்புத், அவரது மனைவி முஸ்கான் ரஸ்தோகியால் கொலை செய்யப்பட்ட நிலையில், அவர்களது ஆறு வயது குழந்தைக்கு உரிமைகோரு இரு குடும்பங்களுக்கு இடையே சண்டை வலுத்துள்ளது.தனது... மேலும் பார்க்க