செங்கத்தில் 14.6 மி.மீ. மழை
திருவண்ணாமலை மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஏப்.3) காலை முதல் வெள்ளிக்கிழமை காலை வரை அதிகபட்சமாக செங்கத்தில் 14.6 மி.மீ. மழை பதிவானது.
மாவட்டத்தின் பிறபகுதிகளில் பெய்த மழை அளவு மில்லி.மீட்டரில்: திருவண்ணாமலை-4.2 மி.மீ, போளூா்-9.4, கலசப்பாக்கம்-10, தண்டராம்பட்டு-5, ஆரணி-3, வந்தவாசி-4, கீழ்பென்னாத்தூா் 3.4, சேத்பட்டு 13 மி.மீ. மழை பதிவானது. வெள்ளிக்கிழமையும் மாவட்டத்தின் சில இடங்களில் லேசான மழை பெய்தது.