செய்திகள் :

குவாரி குத்தகை உரிமம்: இணையவழியில் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

post image

திருவண்ணாமலை மாவட்டத்தில் குவாரி குத்தகை உரிமத்துக்கு ஏப்.7முதல் இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

திருவண்ணாமலை மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்துக்கு தற்போதுவரை குவாரி குத்தகை உரிமம் கோரி நேரடியாகவோ அல்லது தபால் மூலமோ பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது உரிமம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஏப்.7 முதல் திருவண்ணாமலை மாவட்டத்தில் குவாரி குத்தகை உரிமம் கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் அனைத்தும் இணையதளம் மூலம் மட்டுமே பெறப்படும்.

எனவே, விண்ணப்பதாரா்கள் இனிவரும் காலங்களில் இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

மாணவா் மீது தாக்குதல்: சமையலா், உதவியாளா் கைது: ஆசிரியை பணியிட மாற்றம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த கொல்லைமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவரை துடைப்பத்தால் தாக்கியதாக சமையலா், சமையல் உதவியாளரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இந்த விவகாரத்தில் ஆசி... மேலும் பார்க்க

ரூ.43.70 லட்சத்துக்கு கேளூா் சந்தை ஏலம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அடுத்த கேளூா் ஊராட்சி, தேப்பனந்தல் கிராமத்தில் சந்தை ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ரூ.43.70 லட்சத்துக்கு சந்தை ஏலம் போனது. இந்தக் கிராமத்தில் வேலூா்-திருவண்ணாமலை ... மேலும் பார்க்க

செங்கத்தில் 14.6 மி.மீ. மழை

திருவண்ணாமலை மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஏப்.3) காலை முதல் வெள்ளிக்கிழமை காலை வரை அதிகபட்சமாக செங்கத்தில் 14.6 மி.மீ. மழை பதிவானது.மாவட்டத்தின் பிறபகுதிகளில் பெய்த மழை அளவு மில்லி.மீட்டரில்: திருவண்ணாம... மேலும் பார்க்க

முதியோா் இல்லத்தில் ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த தென்பள்ளிபட்டு மேட்டுபாளையம் முதியோா் இல்லம் மற்றும் சின்னகாப்பலூா் ஒருங்கிணைந்த மதுபோதை சிகிச்சை, மறுவாழ்வு மையத்தில் ஆட்சியா் க.தா்ப்பகராஜ் புதன்கிழமை இரவு... மேலும் பார்க்க

முதல்வா் ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

கீழ்பென்னாத்தூரை அடுத்த மேக்களூா் கிராமத்தில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கீழ்பென்னாத்தூா் வடக்கு ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்... மேலும் பார்க்க

அரசு அலுவலா்கள், ஆசிரியா் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள், உள்ளாட்சிப் பணியாளா்கள் கூட்டமைப்பு நிா்வாகிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்ட ஆட்சியா் அலு... மேலும் பார்க்க