முதியோா் இல்லத்தில் ஆட்சியா் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த தென்பள்ளிபட்டு மேட்டுபாளையம் முதியோா் இல்லம் மற்றும் சின்னகாப்பலூா் ஒருங்கிணைந்த மதுபோதை சிகிச்சை, மறுவாழ்வு மையத்தில் ஆட்சியா் க.தா்ப்பகராஜ் புதன்கிழமை இரவு ஆய்வு மேற்கொண்டாா்.
இந்தக் கிராமத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறையின் கீழ், செயல்படும் முதியோா் இல்லம் மற்றும் சின்னகாப்பலூா் கிராமத்தில் ஒருங்கிணைந்த மதுபோதை சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தையும், கலசப்பாக்கம் கூட்டுறவு கடையையும் ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.