செய்திகள் :

போதை மாத்திரைகள் வைத்திருந்த 2 பேர் கைது

post image

அரக்கோணம்: அரக்கோணத்தில் போதையூட்டக்கூடிய மாத்திரைகளை வைத்திருந்த இரண்டு பேரை வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.

அரக்கோணம் நகரில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வெள்ளிக்கிழமை இரவு ரோந்து சென்றனர்.

அப்போது, அந்தப் பகுதியில் சந்தேகத்துக்குரிய முறையில் நடந்துச் சென்ற இரண்டு இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், ஆற்காடு அண்ணா நகரைச் சேர்ந்த ஜெய்கணேஷ்(21), ராணிப்பேட்டை சிப்காட்டைச் சேர்ந்த ஹரிஷ் குமார்(22)) என்பதும், அவர்களது பைகளை சோதனையிட்ட போது ரூ. 21,000 மதிப்புள்ள 1080 போதையூட்டக்கூடிய மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை கைது செய்தனர். மேலும், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் இருந்து 682 இந்தியா்கள் நாடு கடத்தல்: இந்திய வெளியுறவு அமைச்சகம்

போலி மருத்துவரின் இதய அறுவைச் சிகிச்சையால் 7 பேர் பலி!

மத்தியப் பிரதேசத்தின் தமோ மாவட்டத்தில் இதய அறுவைச் சிகிச்சை செய்து 7-க்கும் மேற்பட்டோரை போலி மருத்துவர் ஒருவர் கொலை செய்தது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தமோ மாவட்டத்திலுள்ள கிறிஸ்டி... மேலும் பார்க்க

உக்ரைன் அதிபரின் சொந்த ஊர் மீது ரஷியா தாக்குதல்! 18 பேர் பலி!

உக்ரைன் அதிபரின் சொந்த ஊரின் மீது ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் குழந்தைகள் உள்பட 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைன் நாட்டின் மத்திய மாகாணத்திலுள்ள அதிபர் ஸெலென்ஸ்கியின் சொந்த ஊரான க்ரிவியி ரிஹ் ... மேலும் பார்க்க

தடாலடியாக 2 ஆவது நாளாக குறைந்த தங்கம் விலை!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக சனிக்கிழமை பவுனுக்கு ரூ.720 குறைந்து ரூ.66,480-க்கு விற்பனையாகிறது.தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து வந்த நிலையில், கடந்த 9 நாள்களில் பவுனுக்கு ர... மேலும் பார்க்க

ஆள் கடத்தலில் ஈடுபட்ட கிளர்ச்சியாளர்கள் கைது! ஆயுதங்கள் பறிமுதல்!

மணிப்பூர் மாநிலத்தின் பிஷ்னுப்பூர், தௌபல் மற்றும் கிழக்கு இம்பால் மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட இயக்கங்களைச் சேர்ந்த 4 கிளர்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிஷ்னுப்பூரின் நம்போல் பகுதியைச் சேர்ந... மேலும் பார்க்க

அண்ணா சிலை மீது திமுக-பாஜக கொடியை இணைத்து போடப்பட்டதால் பரபரப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பேரறிஞர் அண்ணா சிலை சிலை மீது திமுக-பாஜக கொடியை இணைத்து போடப்பட்டதால் பரபரப்பு நிலவியது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே பேரறிஞர் அண்ணா சிலை உள்ளது. அண்ணா பிறந்த நாள், நி... மேலும் பார்க்க

மியான்மர் நிலநடுக்கம்: மீட்புப் பணியில் இலங்கை ராணுவம்!

மியான்மர் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் அங்கு மீட்புப் பணிகளை மேற்கொள்ள 3 ராணுவப் படைகளை அனுப்பவுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.மியான்மரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தினால் ஏராளமான மக்கள் கொல்... மேலும் பார்க்க