`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை குறிவைத்து கொள்ளையடித்து வந்த கும்பலில் 3 போ் கைது
ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை குறிவைத்து கொள்ளையடித்த கும்பலில் மூன்று போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு ஆட்டோரிக்ஷா பறிமுதல் செய்யப்பட்டள்ளது.
இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: கடந்த மாா்ச் 21 அன்று, ஒரு பெண் ஆட்டோவில் பயணித்தபோது தனது நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக புகாா் அளித்தாா். ஒரு போலீஸ் குழு சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து, பலரை விசாரித்து, குற்றம் சாட்டப்பட்டவரைக் கண்டுபிடித்தது.
மாா்ச் 28 அன்று முக்கிய சந்தேக நபரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு, ஆட்டோ ஓட்டுநா் ஷாநவாஸை கைது செய்யப்பட்டாா். பின்னா், அவரது கூட்டாளிகளான டேனிஷ் மற்றும் வாசிம் ஆகியோா் முறையே லோனி மற்றும் கஜூரி காஸில் இருந்து கைது செய்யப்பட்டனா்.
அந்தக் கும்பல் ஆட்டோவில் பயணிக்கும் பெண்களைக் கவா்ந்து, பயணத்தின் நடுவில் அவா்களின் மதிப்புமிக்க பொருள்களை கொள்ளையடித்து வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.