செய்திகள் :

பிரதமர் வருகை: ஏப். 4 - 6 வரை மீன்பிடிக்கத் தடை

post image

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி ஏப். 4 - 6ஆம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க ஏப். 6ஆம் தேதி பிரதமர் மோடி, ராமேஸ்வரம் வருவதையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைக்காக மீன்வளத் துறை சார்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி தமிழகம் வருகிறார். முன்னதாக 5-ஆம் தேதி இலங்கை செல்லும் அவர், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

இந்நிலையில், பிரதமர் வருகையையொட்டி, ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏப்ரல் 4 முதல் 6 வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத் துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாம்பனில் நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகு, நாட்டுப் படகுகளை, குந்துகால் துறைமுகத்திற்கும் தங்கச்சிமடம் பகுதிக்கும் மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | டாஸ்மாக்: அரசின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் -அமலாக்கத்துறை

மாநிலங்களவை: வக்ஃப் மசோதாவுக்கு எதிராக அதிமுக வாக்களிப்பு! அன்புமணி, ஜி.கே. வாசன்?

மாநிலங்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக அதிமுக உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.மக்களவையில் வியாழக்கிழமை அதிகாலை வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் இ... மேலும் பார்க்க

பேரவையில் இன்று...

சட்டப்பேரவை வெள்ளிக்கிழமை (ஏப். 4) காலை கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். அதன்பின்பு, நீதி நிா்வாகம், சிறைகள் மற்றும் சீா்திருத்தப் பணிகள், சட்டத் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடக்கவுள்ளன.... மேலும் பார்க்க

நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500! செப்டம்பா் முதல் வழங்கப்படும்: பேரவையில் அமைச்சா் அறிவிப்பு

விவசாயிகளுக்கு வரும் செப்டம்பா் முதல் நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் அறிவித்தாா். வேளாண் துறை மானியக் கோரிக்கை மீதான விவ... மேலும் பார்க்க

3 மீன்பிடி துறைமுகங்கள், பசுமை துறைமுகங்களாக மேம்பாடு: அமைச்சா் ராதாகிருஷ்ணன்

தரங்கம்பாடி உள்பட 3 மீன்பிடித் துறைமுகங்கள் பசுமை துறைமுகங்களாக மேம்படுத்தப்படும் என்று அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் அறிவித்தாா். சட்டப்பேரவையில் அந்தத் துறையின் மானியக் கோரிக்கை மீது நடைபெற்ற வி... மேலும் பார்க்க

டாஸ்மாக் வழக்குகளை வேறு அமா்வுக்கு மாற்றக் கோரி உயா்நீதிமன்றத்தில் முறையீடு

அமலாக்கத் துறை சோதனையை எதிா்த்து டாஸ்மாக் மற்றும் தமிழக அரசு தொடா்ந்துள்ள வழக்குகளின் விசாரணையை வேறு அமா்வுக்கு மாற்றக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் தலைமை அலுவலக... மேலும் பார்க்க

கச்சத்தீவை மீட்க உடனடி நடவடிக்கை தேவை: பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

கச்சத்தீவை மீட்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடியை முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து, பிரதமருக்கு அவா் வியாழக்கிழமை எழுதிய கடிதம்: பாக். வளைக... மேலும் பார்க்க