செய்திகள் :

`போலீஸ் பேர் வாங்க என் மகனை என்கவுன்ட்டர் செய்துள்ளனர்' - சுபாஷ் சந்திரபோஸின் தந்தை புகார்

post image

``கொலைச் சம்பவத்தில் ஈடுபடாத என் மகனை வெளியூரில் வைத்து என்கவுன்ட்டர் செய்து இங்கு கொண்டு வந்து போட்டுள்ளனர்" என்று சுபாஷ் சந்திரபோஸின் தந்தை வீரபத்திரன் காவல்துறை மீது குற்றம்சாட்டியுள்ளார்.

சுபாஷ் சந்திரபோஸ்

மதுரை மாவட்டம், தனக்கன்குளம் பகுதியில் கடந்த 22 ஆம் தேதி திமுக பிரமுகர் வீ.கே.குருசாமியின் சகோதரி மகன் கிளாமர் காளி என்ற காளீஸ்வரன் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இரு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.

இந்த வழக்கில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஒருவர் சரணடைந்த நிலையில் சிறையிலுள்ள வெள்ளைக்காளியின் தாயாரான ஜெயக்கொடி மற்றும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், முத்துக்கிருஷ்ணன், மதுரை நந்தகுமார், காமராஜபுரம் நவீன்குமார், சென்னையைச் சேர்ந்த கார்த்திக், திருப்பூரைச் சேர்ந்த அசன் ஆகிய 7 பேரை தனிப்படையினர் கைது செய்தனர்.

என்கவுன்ட்டர்

இதனிடையே கிளாமர் காளி கொலை வழக்கில் தொடர்பிருப்பதாக சுபாஷ் சந்திரபோஸ் என்பவரை மதுரை அருகே பிடிக்க சென்றபோது துப்பாக்கியால் சுட வந்ததால், என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது. இதனையடுத்து சுபாஷ் சந்திரபோஸின் உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டடது.

பின்னர் என்கவுன்ட்டர் தொடர்பாக சுபாஷ் சந்திரபோஸின் உடலை உடற்கூறாய்வு அறையில நேரில் பார்த்து மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினார். பின்னர் சந்திரபோஸின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தியதை தொடர்ந்து சுபாஷின் உடல் முழுவதும் ஸ்கேன் செய்த பின்னர் உடற்கூறாய்வு தொடங்கியது.

அங்கு செய்தியாளர்களிடம் பேசிய சுபாஷ் சந்திரபோஸின் தந்தை வீரபத்திரன், "எனது மகன் வேறொரு வழக்கு ஒன்றில் நிபந்தனை ஜாமீனில் வந்து கையழுத்திட்டு வந்தான். அந்த நேரம் 'கிளாமர் காளி கொலை செய்யப்பட்டுள்ளதால் நீ வெளியில் வந்தால் அந்த கொலை வழக்கில் உன்னை கைது செய்துவிடுவார்கள்' என உளவுத்துறை போலீஸ் ஒருவர் எச்சரித்ததால் சுபாஷ் வெளியூரில் இருந்தான். திருந்தி வாழ்வதாக காவல்துறையினரிடம் தெரிவித்த நிலையில் அவனுக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வந்தோம். ஆனால் போலீஸ் என்கவுன்ட்டர் செய்துவிட்டது.

வீரபத்திரன்

என் மகன் தவறே செய்திருந்தாலும் காலில் சுட்டிருக்கலாம், எதற்காக கொல்ல வேண்டும்? திட்டமிட்டு எனது மகனை காவல்துறையினர் கொலை செய்துவிட்டனர். என் மகன் நேற்று காலை வரை வீடியோ காலில் எங்களுடன் பேசினான். ஆனால், காவல்துறையினர் என் மகனை வேறு எங்கோ பிடித்து சுட்டுவிட்டு மதுரையில் வந்து போட்டுவிட்டனர். இதுவரை எனக்கு எந்த தகவலும் போலீஸ் கூறவில்லை. உரிய விசாரணை நடத்த வேண்டும். காவல்துறையினர் பேர் வாங்க கிளாமர் காளி கொலை வழக்கில் தொடர்பில்லாத என் மகனை என்கவுன்ட்டர் செய்துள்ளனர். உறவினர்களான எங்கள் இரு தரப்பினரிடையே காவல்துறைதான் மோதலை ஏற்படுத்தி வருகிறது." என்றார்.

இதனால் ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூறாய்வு நடைபெறும் இடத்தில் துணை ஆணையர்கள், உதவி ஆணையர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

``காதலனை திருமணம் செய்ய தடையாக இருந்தது, அதனால்..'' - 3 குழந்தைகளை கொன்ற தாய் பகீர் வாக்குமூலம்

பள்ளியில் ஒன்றாக படித்த நண்பர்களை திடீரென சந்தித்துக்கொண்டால் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் இருக்கும். ஆனால் ஆந்திராவில் பள்ளியில் படித்த நண்பனை சந்தித்ததால் ஒரு பெண் தனது மூன்று குழந்தைகளை கொடூரமாக கொல... மேலும் பார்க்க

மருதமலை : நாளை கும்பாபிஷேகம்; நேற்று வெள்ளி வேல் திருட்டு - சாமியார் வேட ஆசாமியை தேடும் போலீஸ்

கோவை மாவட்டம், மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இது தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளுக்கு இணையாக பிரபலமான கோயிலாகும். பக்தர்கள் இந்த கோயிலை முருகனின் ஏழாவது படை வீடு என்றும் அழைப்பார்... மேலும் பார்க்க

50 வயதில் 10-ம் வகுப்பு தேர்வு; தாய்க்கு பதில் தேர்வு எழுதிய 28 வயது மகள் கைது!

தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 28-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. தமிழ் தேர்வு முடிந்த நிலையில் நேற்று ஆங்கில பாடத் தேர்வு நடைபெற்றது. இதே போல் நாகை மாவட்டத்தில் மாணவர்கள் மற்றும்... மேலும் பார்க்க

ரூ.2 கோடி மதிப்பிலான ஹைபிரிட் கஞ்சா; சிக்கிய துணை நடிகை - 3 மாதம் காத்திருந்து தட்டித்தூக்கிய போலீஸ்

கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா என்ற தஸ்லிமா சுல்தான்(41). இவர் தமிழ்நாட்டின் திருவள்ளூர் உலகநாதபுரத்தில் வசித்துவந்தார். கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் பிறோஸ்(26). தஸ்லிமாவும், பிற... மேலும் பார்க்க

குடிபோதை: காசு கேட்டு தகராறு; அக்கா மகனை அடித்து கொன்ற இளைஞர்.. போதை தெளிந்ததும் தூக்கிட்டு மரணம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கீழவடகரை அழகர்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை மனைவி ஆனந்தி. இவர்களுக்கு நிசாந்த் என்ற 14 வயது மகனும், 8 வயதில் ஒரு மகள் 3 ஆம் வகுப்பு படித்துவந்தார். நிஷாந்த் 8 ... மேலும் பார்க்க

பணத்தகராறு… பெற்ற தந்தையை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மகன் - நெல்லையில் பயங்கரம்!

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை அருகில் உள்ள சிவந்திபட்டியைச் சேர்ந்தவர் பூலையா. இவருக்கும், இவருடைய மகன் கணேசனுக்கும் சொத்துத் தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில், பூலையா கடந்த 20 நாட்களுக்கு முன்பு ... மேலும் பார்க்க