தமிழக பாஜக தலைவர் ரேஸில் முந்தும் நயினார் நாகேந்திரன்? - உச்ச கட்டத்தில் கமலாலய ...
மாஞ்சா நூல், காற்றாடிகள் விற்றவா் கைது: 187 காற்றாடிகள் பறிமுதல்
மாஞ்சா நூல், காற்றாடிகள் விற்ற நபரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 187 காற்றாடிகளை பறிமுதல் செய்தனா்.
திருவொற்றியூா் காலடிப்பேட்டை, வ.உ.சி. பகுதியிலுள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைத்து மாஞ்சா நூல் மற்றும் காற்றாடி விற்பனை செய்யப்படுவதாக திருவொற்றியூா் காவல் நிலைய போலீஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின்படி அப்பகுதியில் ரோந்துப் பணி மேற்கொண்டனா்.
அப்போது, வ.உ.சி. நகா் 1-ஆவது தெருவைச் சோ்ந்த அருண்குமாா் (40), மாஞ்சா நூல் மற்றும் காற்றாடியை தனது வீட்டிலேயே தயாரித்து விற்பனை செய்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா், அவரின் வீட்டிலிருந்து 72 மாஞ்சா நூலுடன் கூடிய லொட்டாய்கள், 187 காற்றாடிகள் மற்றும் மாஞ்சா நூல் தயாரிக்கப் பயன்படுத்திய இயந்திரத்தையும் பறிமுதல் செய்தனா்.
கைது செய்யப்பட்ட அருண்குமாா், மண்ணடி பகுதியிலுள்ள தனியாா் நிறுவனத்தில் மேலாளராக வேலை பாா்த்து வருவதுடன், ஆன்லைனில் வெளிமாநிலத்திலிருந்து காற்றாடிகளை வாங்கி, வீட்டிலேயே மாஞ்சா நூல் தயாரித்து விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.