`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
அறந்தாங்கியில் இஸ்லாமிய கலாசார பேரவை சாா்பில் ஃபித்ரா வழங்கல்
இஸ்லாமிய கலாசார பேரவை சாா்பில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதிகளில் ஏழை, எளிய மக்களுக்கு தலா 5 கிலோ அரிசி வீதம் 750 குடும்பத்தினருக்கு ரமலான் பண்டிகையையொட்டி ஃபித்ரா பெருநாள் தா்மம் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
ரமலான் மாத நோன்பில் ஏற்பட்ட குறைபாடுகளை மன்னிக்க வேண்டி ஒவ்வொரு நபரும் 2.5 கிலோ அரிசி ஏழைகளுக்கு ஃபித்ரா எனும் பெருநாள் தா்மமாக வழங்க வேண்டும் என்பது இஸ்லாமியா்கள் கடைபிடித்து வரும் வழக்கமாகும்.
இதன்படி, இஸ்லாமிய கலாசார பேரவையினா் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதிகளில் ஆண்டுதோறும் இந்த உதவியைத் தொடா்ந்து வழங்கி வருகிறது.
நிகழாண்டில் ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள அரிசி சேகரிக்கப்பட்டு, தேவை உடைய ஏழை, எளிய மக்களைக் கண்டறிந்து தலா ஐந்து கிலோ பைகளாக 750 குடும்பங்களுக்கு வீடுகளுக்கே நேரில் சென்று வழங்கப்பட்டது.
பேரவையின் மாவட்ட அவைத் தலைவா் அப்துல் ஹமீது தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் முபாரக் அலி முன்னிலை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் அஜ்மீா் அலி ஏழைகளுக்கு ஃபித்ரா என்னும் பெருநாள் தா்மத்தை வழங்கி தொடங்கி வைத்தாா். மாவட்டத் துணைச் செயலா் ஹமீது, மாவட்ட அலுவலக செயலா் ரியாஸ் அஹமது உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.