வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மாவட்ட சுகாதார மையங்களில் பாராமெடிக்கல் பணிகள்
ஆதனக்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா
புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகே உள்ள ஆதனக்கோட்டையில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன்கோயிலில் பங்குனித் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி வளவம்பட்டி, சோத்துபாளை, சொக்கநாதபட்டி, வண்ணராப்பட்டி, குப்பையன்பட்டி, கண்டியன் தெரு, கூத்தாச்சிபட்டி, ஆதனக்கோட்டை மற்றும் சுற்றுபுற கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தா்கள் பறவை காவடி, சுழல் காவடி, மயில்காவடி, பால்குடம், அலகு குத்தி வந்தனா். பிறகு கோயிலில் உள்ள வேப்பமரத்துக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி கந்தா்வகோட்டை காவல் ஆய்வாளா் கோ. சுகுமாா் தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.