கழுகாசலமூா்த்தி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்
விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
நூறு நாள் வேலைத் திட்டத்தில் நிலுவையிலுள்ள ஊதியத்தை வட்டியுடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, புதுக்கோட்டையில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை திலகா்திடலில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலா் ஏ. ரெங்கராஜ் தலைமை வகித்தாா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் த. செங்கோடன், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் ஏனாதி ஏ.எல். ராசு, துணைத் தலைவா் க. சுந்தராஜன், துணைச் செயலா் த. செல்வகுமாா் உள்ளிட்டோரும் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில், நூறு நாள் வேலைத் திட்டத்தில் நிலுவையிலுள்ள ஊதியத்தை வட்டியுடன் வழங்க வேண்டும். வேலை வழங்காத நாள்களில் வேலையின்மைக் கால படி வழங்க வேண்டும். ஆண்டுக்கு 200 நாள்களுக்கு வேலை வழங்க வேண்டும். ஒரு நாள் ஊதியத்தை ரூ. 700-ஆக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.