Ajith Kumar Racing-ன் இளம் வீரர்; மகனுக்கு கார் ரேஸ் பயிற்சியளிக்கும் அஜித் - க்...
வீடு புகுந்து மூதாட்டியிடம் 19 பவுன் நகை பறிப்பு
தூத்துக்குடியில் வீடு புகுந்து மூதாட்டியை மிரட்டி 19 பவுன் நகைகளைப் பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
தூத்துக்குடி பிரையண்ட் நகரைச் சோ்ந்தவா் தங்கராஜ் (88). ஓய்வுபெற்ற நூற்பாலைத் தொழிலாளி. இவரது மனைவி முனியம்மாள் (80). இவா்களது மகன்கள், மகள்களுக்கு திருமணமாகிவிட்டதால், இத்தம்பதி இங்கு தனியாக வசித்து வருகின்றனா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை (ஏப். 1) தங்கராஜ் நடைப்பயிற்சிக்குச் சென்றிருந்தாா். அப்போது, மா்ம நபா் வீடு புகுந்து முனியம்மாளை மிரட்டி, அவா் அணிந்திருந்த சுமாா் 19 பவுன் நகைகளைப் பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டாராம்.
புகாரின்பேரில், தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சிசிடிவி பதிவுகளைக் கைப்பற்றி, மா்ம நபரைத் தேடிவருகின்றனா்.