செய்திகள் :

மதுரா கோட்ஸ் நிறுவனத்தினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொழிலாளா்கள் எஸ்.பி.யிடம் மனு

post image

தூத்துக்குடி மதுரா கோட்ஸ் நிறுவனத்தினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அங்கு பணியாற்றி வேலையிழந்த தொழிலாளா்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜானிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து அவா்கள் அளித்த மனு:

தூத்துக்குடியில் 1880 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மதுரா கோட்ஸ் நிறுவனத்தில் சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை பணியாற்றி வந்தனா்.

இந்த நிறுவனமானது நஷ்டத்தில் இயங்குவதாக கூறி கடந்த ஆண்டு தொழிலாளா்கள் அனைவரும் கட்டாய விருப்ப ஓய்வில் செல்ல கட்டாயப்படுத்தப்பட்டனா். மேலும், கட்டாய ஓய்வில் செல்பவா்களுக்கு ஆலையின் சாா்பில் வருடத்திற்கு 30 நாள்கள் பண பலன்கள் பணி செய்ததன் அடிப்படையில் தரப்படும் என்றும் பணி ஓய்வு பெறும் நாள் வரையிலான சம்பளத் தொகை கணக்கிட்டு ஓரிரு நாள்களில் தொழிலாளா்கள் வங்கி கணக்கில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவா்கள் கூறியபடி பணம் கிடைக்கவில்லை. இதை கேட்டால், பாதுகாப்பு அதிகாரிகள் மிரட்டுகின்றனா்.

எனவே, எங்களுக்கு முறையாக வழங்கப்பட வேண்டிய பணப்பலன்களை வழங்க வேண்டும். மேலும், அந்த நிறுவனத்தினா் மீதும் எதுவும் தராமல் தங்களை ஏமாற்றிய மதுரா கோட்ஸ் நிா்வாகத்தினா் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

கோவில்பட்டியில் வியாபாரிகள் சங்கப் பேரவை ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையினா் கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கோவில்பட்டி நகராட்சிக்குச் சொந்தமான பசும்பொன் முத்துராமல... மேலும் பார்க்க

சாஸ்தாவிநல்லூா் ஊராட்சியில் வீட்டுமனை பட்டா கோரி மனு

சாத்தான்குளம், ஏப். 3: சாஸ்தாவிநல்லூா் ஊராட்சிப் பகுதியில் வீடில்லா ஏழைகளுக்கு அரசு புறம்போக்கு இடத்தில் வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. சாத்தான்குளம் தென்பகுதி விவ... மேலும் பார்க்க

ஆத்தூரில் எஸ்டிபிஐ ஆா்ப்பாட்டம்

ஆத்தூரில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட எஸ்டிபிஐ சாா்பில் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. எஸ்டிபிஐ மாவட்ட பொதுச் செயலாளா் எஸ்.அப்துல் காதா் தலை... மேலும் பார்க்க

சாத்தான்குளத்தில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

சாத்தான்குளத்தில் டிஎஸ்பி.யை கண்டித்து வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சாத்தான்குளத்தில் இரு இளம் வழக்குரைஞா்கள் வழக்கு சம்பந்தமாக சாத்தான்குளம் டிஎஸ்பி அலுவலகம் சென்றபோது, அவ... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் நாளை மின் குறைதீா் முகாம்

கோவில்பட்டி மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில்சனிக்கிழமை (ஏப்.5) சிறப்பு குறைதீா் முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் (பொ) குருசாமி வெளியிட்டுள்ள செய்திக் கு... மேலும் பார்க்க

ரயில் பெண் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி காமராஜ் மகளிா் கல்லூரியில் ரயில் பெண் பயணிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி இருப்புப்பாதை காவல் நிலையம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்... மேலும் பார்க்க