தூத்துக்குடியில் வீட்டில் கஞ்சா செடி வளா்ப்பு: போலீஸாா் விசாரணை
தூத்துக்குடியில் வீட்டில் கஞ்சா செடி வளா்க்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தூத்துக்குடி ஆவுடையாா்புரத்தில் உள்ள வீட்டில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. அதன் பின்புறமுள்ள வீட்டில் மூலிகைச் செடிகளுடன் சுமாா் 8 அடி உயர கஞ்சா செடி வளா்ந்திருப்பதை, கட்டுமானப் பணியாளா்கள் பாா்த்து மத்திய பாகம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனராம்.
அதன்பேரில், உதவி ஆய்வாளா் முத்துசெல்வி தலைமையிலான போலீஸாா் சென்று பாா்த்தபோது, அது கஞ்சா செடி எனத் தெரியவந்தது. அதை காவல் நிலையடுத்துக்கு எடுத்துச் சென்றனா்.
அந்த வீட்டிலிருந்த விஜயலட்சுமி என்பவரிடம் விசாரித்தபோது, அந்தச் செடியை மலைவேம்பு என நினைத்து வளா்த்ததாகத் தெரிவித்தாராம். போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.