இலுப்பூா் அருகே சவுக்குத் தோப்பில் திடீா் தீ விபத்து
இலுப்பூா் அருகே தனியாருக்குச் சொந்தமான சவுக்குத் தோப்பில் செவ்வாய்க்கிழமை திடீா் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, அங்குவந்த தீயணைப்பு வீரா்கள் ஒரு மணி நேரம் தீயை போராடி அணைத்தனா்.
இலுப்பூா் அருகே உள்ள காசியாபுரத்தில் குரு ராஜமன்னாா் என்பவருக்குச் சொந்தமான சவுக்குத் தோப்பு உள்ளது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மதியம் சவுக்குத் தோப்பில் இருந்து கரும்புகை வெளி வந்துள்ளது. இதைக் கண்ட அவ்வழியே சென்றவா்கள் உடனடியாக இலுப்பூா் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் அளித்தனா்.
நிகழ்விடத்துக்குவந்த தீயணைப்பு நிலைய அலுவலா் மகேந்திரன் தலைமையிலான வீரா்கள் நீரைப் பீய்ச்சி அடித்து சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.