Ajith Kumar Racing-ன் இளம் வீரர்; மகனுக்கு கார் ரேஸ் பயிற்சியளிக்கும் அஜித் - க்...
செங்கோட்டை, திருச்சி பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்
ரயில்வே பாலப் பராமரிப்பு பணி காரணமாக செங்கோட்டை மற்றும் திருச்சி பயணிகள் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஈரோட்டை அடுத்த பாசூா் - ஊஞ்சலூா் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்வே பாலப் பராமரிப்பு பணிகள் வியாழக்கிழமை (ஏப்ரல் 3) மற்றும் சனிக்கிழமை (ஏப்ரல் 5) ஆகிய 2 நாள்கள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, பிற்பகல் 2 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்படும் ஈரோடு-செங்கோட்டை பயணிகள் ரயில் வியாழக்கிழமை (ஏப்ரல் 3) மற்றும் 5-ஆம் தேதி ஆகிய இரு நாள்கள் மட்டும் ஈரோட்டில் இருந்து புறப்படுவதற்குப் பதிலாக கரூரிலிருந்து புறப்பட்டு செங்கோட்டைக்குச் செல்லும்.
செங்கோட்டையில் இருந்து ஈரோட்டுக்கு இயக்கப்படும் பயணிகள் ரயிலும் இந்த 2 நாள்கள் மட்டும் செங்கோட்டையில் இருந்து கரூா் வரை மட்டுமே இயக்கப்படும்.
இதேபோல ஈரோட்டில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயிலும் இந்த இரண்டு நாள்கள் மட்டும் கரூரிலிருந்து இயக்கப்படும். மறுமாா்க்கத்தில் திருச்சியில் இருந்து கரூா் வரை மட்டும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.