வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மாவட்ட சுகாதார மையங்களில் பாராமெடிக்கல் பணிகள்
தென்னங்குடி ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோயிலில் பங்குனித் தேரோட்டம்
புதுக்கோட்டை அருகேயுள்ள தென்னங்குடியில் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோயிலில் பங்குனித் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா்.
இக்கோயிலில் பங்குனித் திருவிழா அண்மையில் தொடங்கியது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக, தேரில் முத்துமாரி எழுந்தருளினாா்.அதன்பிறகு பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனா். நான்குரத வீதிகளிலும் தோ் சுற்றி வந்து நிலையை அடைந்தது.
முன்னதாக ஏராளமான பக்தா்கள் பால் குடம் எடுத்தும், அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும் வந்து தங்களின் நோ்த்திக் கடனை செலுத்தினா். பாதுகாப்பு ஏற்பாடுகளை உடையாளிப்பட்டி போலீஸாா் செய்திருந்தனா்.