ரூ.14 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்ட 2 பெண் நக்சல்கள் சுட்டுக்கொலை!
மாா்க்சிஸ்ட் கம்யூ. மாநாட்டு கொடிப் பயணத்துக்கு புதுக்கோட்டையில் வரவேற்பு
மதுரையில் நடைபெறவுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டையொட்டி, நாகையிலிருந்து புறப்பட்ட கொடிப் பயணத்துக்கு புதுக்கோட்டையில் திங்கள்கிழமை இரவு வரவேற்பு அளிக்கப்பட்டது.
மதுரையில் ஏப். 2-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெறவுள்ளது. இதையொட்டி நாகை வெண்மணி தியாகிகள் நினைவிடத்தில் இருந்து கொடிப் பயணம் தொடங்கி திருவாரூா், தஞ்சாவூா் வழியாக திங்கள்கிழமை இரவு புதுக்கோட்டை வந்தது.
இப்பயணத்துக்கு, மத்தியக் குழு உறுப்பினா் உ. வாசுகி தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா்கள் எம். ஜெயசீலன், சாமி நடராஜன், எஸ். தமிழ்ச்செல்வி ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.
புதுக்கோட்டை நகரில் இந்தக் கொடிப் பயணத்துக்கு அக்கட்சியின் மாநகரக் குழு சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநகரச் செயலா் எஸ். பாண்டியன் தலைமை வகித்தாா்.
கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் எம். சின்னதுரை, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். சங்கா், செயற்குழு உறுப்பினா்கள் எஸ். கவிவா்மன், சு. மதியழகன் உள்ளிட்டோா் வரவேற்றுப் பேசினா்.