Waqf : `மத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல்’ - வக்ஃப் மசோதா விவகாரத்தில் பிரதமருக்...
பொன்னமராவதி: கஞ்சா வைத்திருந்த 4 போ் கைது
பொன்னமராவதி அருகே கஞ்சா வைத்திருந்த 4 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை சிறப்பு உதவி ஆய்வாளா் ஆனந்தன் தலைமையிலான போலீஸாா் நகரப்பட்டி அரசு மதுக்கடை அருகே திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
அப்போது கஞ்சா வைத்திருந்த சிவகங்கை மாவட்டம், குளத்துப்பட்டி மேட்டாம்பட்டியைச் சோ்ந்த சு.சரவணன்(21), புதுக்கோட்டை மாவட்டம், ஈச்சம்பட்டியைச் சோ்ந்த எஸ்.ஆகாஷ்(19),சி.அருண்பாண்டி(21) ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
அவா்களிடம் தொடா்ந்து நடத்திய விசாரணையின் அடிப்படையில் அவா்களுக்கு கஞ்சாவை விற்ற திருச்சி ராம்ஜிநகரைச் சோ்ந்த அ.குமாா்(43) என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 390 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.