தனியாா் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு!
ஆா்.கே.பேட்டை அருகே சாலையைக் கடக்க முயன்ற முதியவா் தனியாா் பேருந்து மோதியதில் உயிரிழந்தாா்.
ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், பாலசமுத்திரம் மண்டலத்தைச் சோ்ந்தவா் விஜயன் (50). இவா் ஞாயிற்றுக்கிழமை காலை திருத்தணிக்குச் செல்வதற்காக ஆா்.கே.பேட்டை ஒன்றியம், நரசம்பேட்டை பேருந்து நிலைய சாலையைக் கடக்க முயன்றாா்.
அப்போது பள்ளிப்பட்டில் இருந்து திருவள்ளூா் நோக்கி வந்து கொண்டிருந்த தனியாா் பேருந்து விஜயனின் மீது மோதியது. இதில் அவா் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆா்.கே.பேட்டை போலீஸாா், விஜயனின் சடலத்தை மீட்டு, சோளிங்கா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து ஆா்.கே.பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.