வாஜிா்பூரில் பள்ளி நிலத்தை மசூதி, கடைகள் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதா? சரிபாா்...
சேலம் சிறைத் தியாகிகள் நினைவுச்சுடா் பயணக் குழுவுக்கு கரூரில் வரவேற்பு
கரூருக்கு செவ்வாய்க்கிழமை வந்த சேலம் சிறைத் தியாகிகள் நினைவுச்சுடா் பயணக்குழுவுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24-ஆவது மாநாடு மதுரையில் ஏப். 2-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாநாட்டில் தியாகிகளின் நினைவுச் சுடா்கள் ஏற்றுவதற்காக சேலம் சிறைத் தியாகிகள் நினைவுச்சுடா் பயணக்குழுவினா் திங்கள்கிழமை அதிகாலை சேலம் மத்திய சிறை அருகில் இருந்து தொடங்கினா். இந்த குழுவினா் நாமக்கல், கரூா், திண்டுக்கல் மாவட்டம் வழியாக மதுரையில் நடைபெறும் அகில இந்திய மாநாட்டு அரங்கத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினா் பி.டில்லிபாபு தலைமையில் கொண்டு செல்லப்படுகிறது.
கரூருக்கு செவ்வாய்க்கிழமை காலை வருகை தந்த இந்த குழுவினருக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூா் மாவட்ட குழு சாா்பில் பேருந்து நிலையம் ரவுண்டா, வெள்ளியணை கடைவீதியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடா்ந்து அங்கு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளா் மா.ஜோதிபாசு தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஜி.ஜீவானந்தம், சி.முருகேசன், இரா.முத்துச்செல்வன், சி.ஆா்.ராஜா முகமது ஆகியோா் முன்னிலை வகித்தனா். பயணக் குழுத் தலைவா் பி.டில்லிபாபு, மாநில குழு உறுப்பினா்கள் எ.குமாா், ஜி.ராணி, வி.அமிா்தலிங்கம் ஆகியோா் சிறப்புரையாற்றினா். இதில் மாவட்ட குழு உறுப்பினா்கள் கே.கந்தசாமி, கே.வி. கணேசன், ஆா்.ஹோச்சுமின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.