கருப்பசாமி பாண்டியனின் மறைவு அதிமுகவுக்கு பேரிழப்பு -எடப்பாடி கே.பழனிசாமி
Career: 'டிரஸ் முதல் பெர்ஃப்யூம் வரை' - நேர்காணலுக்கு எப்படிச் செல்ல வேண்டும்? | Tips
'ஆள் பாதி; ஆடை பாதி' - இது அனைவரும் அறிந்த பழமொழியே. இந்த பழமொழி எங்கு பொருந்துமோ, இல்லையோ நேர்காணல்களில் கட்டாயம் பொருந்தும்.
உங்களை நேர்காணல் செய்பவரை உங்களுக்குப் பெரும்பாலும் முன்னரே தெரிந்திருக்காது. அந்த இடத்தில் உங்களுக்காக அவரிடம் முதலில் பேசப்போவது உங்கள் ஆடைதான். அதனால், அதற்கு நீங்கள் மிகப்பெரிய முக்கியத்துவம் தர வேண்டும்.
நேர்காணலுக்குச் செல்லும்போது எந்த மாதிரியான ஆடைகளை அணிந்து செல்லலாம் என்கிற டிப்ஸ்களை வழங்குகிறார் ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா.

பெண்களுக்கு...
"எந்தவிதமான உடல் அமைப்புகளுக்கும் ஸ்ட்ரைட் கட் பேன்ட் மற்றும் சர்ட் மிக சிறப்பாகப் பொருந்தும். பியர் அல்லது ஹவர் கிளாஸ் ஷேப்பில் இருக்கும் உடல் அமைப்புகளுக்கு ஃப்ளேர்ட் ஹை வைஸ்ட் பேண்ட்டும் (Flarred High - Waist Pant), சர்ட்டும் பொருந்தும்.
கார்ப்பரேட், கிரியேட்டிவ், பேஷன் நிறுவனங்களுக்கு பேன்ட் அல்லது ஸ்கிர்ட் + சர்ட் அல்லது பிளேசர் பக்காவாக இருக்கும்.
செவ்வகம் அல்லது ஹவர் கிளாஸ் உடல் அமைப்பு கொண்டவர்கள் பென்சில் ஸ்கிர்ட்கள் அணியலாம். பியர் (Pear) வடிவ உடல் அமைப்பு கொண்டவர்கள் A-லைன் ஸ்கிர்ட்டுகள் அணியலாம்.
இவற்றை வெஸ்டர்ன் ஆடையைத் தேர்வு செய்பவர்கள் அணியலாம்.
இந்தியன் ஸ்டைல்
இந்தியன் ஸ்டைல் ஆடைகளைத் தேர்ந்தெடுப்பவர்கள், பிளெயின் பேஸ்டல் நிற குர்தா அணியலாம். அதற்கு பலாசோ அல்லது லெகிங்க்ஸ் நல்ல சாய்ஸ். சற்று உயரம் குறைவாக இருப்பவர்கள் ஸ்ட்ரைட் குர்தாக்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
நேர்காணலுக்குச் சேலை அணிய விரும்புபவர்கள் சிம்பிளான வேலைபாடுள்ள சேலை மற்றும் பிளெயின் பிளவுஸ் நல்ல ஆப்ஷன். ஃபார்மல் லுக் தருவதற்கு காட்டன், லினன், சில்க் புடவைகளை அணியலாம்.

இதுக்கும் முக்கியத்துவம் தாங்க!
நமது லுக்கை ஆடை மட்டும் சிறப்பாக்கி விடாது. அத்துடன் சில விஷயங்களும் சேரும். அவை...
நேர்காணலுக்குப் பெரிய பெரிய கம்மல்கள், செயின்கள் அணிந்து செல்லாமல் மினிமலிஸ்ட் நகைகள் அணியுங்கள். நியூட்ரல் டோனில் இருக்கும் ஹேண்ட் பேக்குகள் சிறந்தது. க்ளோஸ்ட் டோ பம்ப்ஸ் (Closed Toe Pumps), ப்ளாக் ஹீல்ஸ் (Block Heels), ஸ்லீக் ஃபிளாட்ஸ் - இந்த காலணிகள் இன்னும் உங்கள் தோற்றத்தை மேம்படுத்தும்.
ஹேர்ஸ்டைலை பொறுத்த வரை, ஸ்லீக் போனி டைல், கொண்டை, ஆடம்பரம் அல்லாத எளிய ஓப்பன் ஹேர் பொருத்தமாக இருக்கும். மைல்டான ப்ளோரல் அல்லது ஃபிரஷ் நோட்ஸ் பெர்ஃப்யூம்கள் அந்த இடத்திற்குப் பொருந்தும்.
ஆடை நிறங்களை எடுத்துக்கொண்டால் ஒரே நிறம் அல்லது காம்ப்ளிமென்ட்ரி நிறங்களைத் தேர்வு செய்யலாம்.
ஆண்களுக்கு...
ஒல்லியான உடல் அமைப்பு அல்லது விளையாட்டு வீரர் போன்ற உடல் அமைப்பு கொண்டவர்கள் ஸ்லிம் - ஃபிட் பேன்ட் மற்றும் ஃபார்மல் ஷர்ட்டை தேர்ந்தெடுக்கலாம்.
அனைத்து விதமான உடல் அமைப்புகளுக்கும் ஸ்ட்ரைட் கட் பேன்ட் மற்றும் ஃபார்மல் ஷர்ட் சிறந்தது. சீனியர் ரோல்களுக்காக நேர்காணலுக்குச் செல்பவர்களுக்கு நேவி, சார்கோல், பைஜ் போன்ற நிறங்களிலான பிளேசர் மற்றும் பேன்ட் பொருந்தும்.
அரசுத்துறை, கலாசாரம் சார்ந்த வேலை, கல்வித்துறை ஆகியவற்றின் நேர்காணலுக்குச் செல்பவர்கள் ஃபார்மல் குர்தா + சுரிதார் அல்லது ஸ்ட்ரைட் பேன்ட் அணியலாம். இது காட்டன், லினன், சில்க் இருந்தால் நன்றாக இருக்கும்.

'இந்தப்' பெர்ஃப்யூம்ஸ்
டை அணிபவர்கள், அதன் நிறம் சாலிட் அல்லது குறைந்த பேட்டர்ன் கொண்ட டையை அணியலாம். கிளாசிக் லெதர் ஸ்ட்ரேப் அல்லது மெட்டல் வாட்ச் நேர்காணலுக்குச் சிறந்தது.
பாலிஷ்ட் ஃபார்மல் ஷூ அணிவது நல்லது. தலைமுடி நேர்த்தியாகச் சீவி இருக்க வேண்டும். மைல்ட் வுட்டி (Mild Wood), சிட்ரஸ், அக்வாட்டிக் (Aquatic) நோட் பெர்ஃப்யூம்கள் போதும்.
நீலம், சாம்பல், கருப்பு, பைஜ், வெள்ளை போன்ற நியூட்ரல் நிற ஆடைகள் நல்லது. சர்ட் மற்றும் பேண்டுகளை காண்ட்ராஸ்ட் நிறங்களில் தேர்ந்தெடுங்கள்.
இந்த ஆடைகளுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டுமென்றால், அது நம்மை தன்னம்பிக்கை ஆகும்.
நேர்காணல் அறையில், இது ஒருவித சௌகரியத்தை அளிக்கும். அதனால், ஆடைகளுக்கு மிகுந்த முக்கியத்துவத்தைக் கொடுங்கள்."
ஹேப்பி இன்டர்வியூ :)
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks