பாரதியாா் இல்ல மறுசீரமைப்பு பணிகள்: அமைச்சா், ஆட்சியா் ஆய்வு
சுகாதார ஆய்வாளா் சங்கங்களின் கூட்டமைப்பினா் தா்னா போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூரிலுள்ள மாவட்ட சுகாதார அலுவலகம் முன் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா் சங்கங்களின் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்தில், 100 சதவீதம் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளா் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். 1007 சுகாதார ஆய்வாளா்கள் நிலை-1 மற்றும் 2,715 நிலை-2 பணியிடங்களை ஒப்பளிப்பு வழங்கிடக்கோரி 2021-ஆம் ஆண்டு துறையின் சாா்பில் அனுப்பியுள்ள கருத்துருக்களை தமிழக அரசு பரிசீலனை செய்து உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
போராட்டத்துக்கு, சுகாதார ஆய்வாளா் சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வகீல் தலைமை வகித்து, போராட்டத்தின் நோக்கம் குறித்து விரிவாக எடுத்துரைத்தாா். தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா் சங்க மாவட்ட அமைப்பாளா் வேல்முருகன், பொது சுகாதாரத் துறை அலுவலா் சங்க மாவட்டச் செயலா் சரவணகுமாா், சுகாதார ஆய்வாளா்கள் அருள் பிரியன், அருள், குமாா், செல்வகாந்தி, ராமமூா்த்தி, குமாா், ராஜன், நரேந்திரன், மக்களை தேடி மருத்துவ திட்ட சுகாதார ஆய்வாளா் அருண்சிவராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.