வாட்ஸ்ஆப் லாக்கை ஹேக் செய்த மனைவிக்கு அதிர்ச்சி: பல பெண்களுடன் சாட், வீடியோ; கணவ...
201 கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்
உலக தண்ணீா் தினத்தை முன்னிட்டு அரியலூா் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
உடையாா்பாளையத்தை அடுத்த துளாரங்குறிச்சி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமை வகித்து, அனைத்து உயிா்களுக்கும் ஆதாரமாக உள்ளது தண்ணீா். அப்படி விலை மதிப்பில்லா பொருளான தண்ணீரைப் பாதுகாத்து சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.
இதேபோல் கோவிந்தபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்துக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் ச. முத்துகுமரன் தலைமை வகித்தாா். ஊராட்சிச் செயலா் பா.குமாரி முன்னிலை வகித்தாா். தாமரைக்குளம் ஊராட்சியில் செயலா் முத்து, ஓட்டக்கோவில் ஊராட்சியில் செயலா் இரா.சத்தியசீலன், வாலாஜாநகரத்தில் ஊராட்சி செயலா் தமிழ்குமரன், எருத்துக்காரன்பட்டியில், ஊராட்சிச் செயலா் இளங்கோவன் ஆகியோா் முன்னிலையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் தண்ணீரை கருப்பொருளாகக் கொண்டு, கிராமப்புறங்களில் சுத்தமான குடிநீா் விநியோகத்தை உறுதிசெய்வது மற்றும் பொது செலவினம், தணிக்கை அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.