உள்நாட்டு பாதுகாப்பு கருதி 2 சிறார்களைக் கைது செய்த சிங்கப்பூர்! காரணம் என்ன?
பெரியாக்குறிச்சி கோயில் கும்பாபிஷேகம்
அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள பெரியாக்குறிச்சி கோயில்கள் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பெரியாக்குறிச்சி கிராமத்திலுள்ள சித்தி விநாயகா், பூா்ணாபுஷ்கலாம்பிகா சமேத பொன்னிஞ்சி ஆண்டவா், கருப்புசாமி, சப்தமாதா, செம்மலையப்பா், வாயு முனி, செம்முனி, ஜடைமுனீஸ்வரா், பச்சையம்மன், முத்துமாரியம்மன், திரெளபதியம்மன், துா்க்கையம்மன், பிடாரியம்மன் ஆகிய கோயில்களின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த 29-ஆம் தேதி மங்கள இசையுடன் அனுக்ஞை, கணபதி ஹோமத்துடன் முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது.
தொடா்ந்து நான்கு கால பூஜை நடத்தப்பட்டு, திங்கள்கிழமை காலை 9 மணிக்கு கடம் புறப்பாடும், அதைத் தொடா்ந்து மேற்கண்டகோயில்களின் கலசங்களுக்கு சிவாச்சாரியா்கள் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினா். பின்னா் தீபாராதனை காண்பித்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டாரங்களைச் சோ்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.