செய்திகள் :

`என் சிறுநீரகம் ரூ.75000, கல்லீரல் ரூ.90000'- கடனை அடைக்க உறுப்புகளை விற்கப்போவதாக விவசாயி போராட்டம்

post image

மகாராஷ்டிராவில் கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். நாட்டிலேயே அதிக விவசாயிகள் தற்கொலை செய்யும் மாநிலமாக மகாராஷ்டிரா இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று மகாராஷ்டிராவில் தற்போது ஆட்சி செய்யும் பா.ஜ.க கூட்டணி தெரிவித்து இருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு விவசாய கடன் தள்ளுபடி செய்ய முடியாது என்று தெரிவித்துவிட்டது. மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் இது தொடர்பாக முறைப்படி அறிவிப்பு வெளியிட்டதோடு விவசாயிகள் தங்களது கடனுக்கான மாதாந்திர தவணையை சரியாக கட்டவேண்டும் என்றும், விவசாயிகளின் கடனுக்கு அரசு பொறுப்பேற்காது என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

மாநில அரசு தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதால், பல வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. வாசிம் மாவட்டத்தில் உள்ள அடோனி என்ற கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்ற விவசாயி கடன் வாங்கி இருந்தார். அரசு அதனை தள்ளுபடி செய்யும் என்று எதிர்பார்த்தார். ஆனால் மாநில அரசு கடனை தள்ளுபடி செய்ய முடியாது என்று கூறிவிட்டதால், விவசாயி சதீஷ் தனது வங்கிக் கடனை அடைக்க தனது உடல் உறுப்புகளை விற்பனை செய்யப் போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஒவ்வொரு உடல் உறுப்பும் என்ன விலை என்று எழுதி கழுத்தில் தொங்கவிட்டபடி சதீஷ் போராட்டம் நடத்த ஆரம்பித்துள்ளார்.

அதில் தனது சிறுநீரகத்திற்கு ரூ.75 ஆயிரமும், கல்லீரலுக்கு ரூ.90 ஆயிரமும், கண்ணிற்கு ரூ.25 ஆயிரமும் நிர்ணயித்து இருக்கிறார். அவரது போராட்டம் பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதோடு சமூக வலைதளத்திலும் வெளியாகி வைரலாகி இருக்கிறது.

இது குறித்து சதீஷ் கூறுகையில், ''தேர்தலுக்கு முன்பு விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார். இப்போது நாங்கள்(விவசாயிகள்) கடனை அடைக்கவேண்டும் என்று கூறுகிறார்கள். எங்களிடம் எதுவும் இல்லாத பட்சத்தில் எங்களால் எப்படி கடனை திரும்ப செலுத்த முடியும். எனவே வேறு வழியில்லாததால் எனது உடல் உறுப்புகளை விற்பனை செய்கிறேன்'' என்று குறிப்பிட்டார். அவர் தனது குடும்பத்தினரின் உடல் உறுப்புகளையும் விற்பனை செய்யப்போவதாக கூறி அதற்கான விலையையும் குறிப்பிட்டுள்ளார்.

மனைவியின் சிறுநீரகத்திற்கு ரூ.40 ஆயிரமும், மகனின் சிறுநீரகம் ரூ.20 ஆயிரமும், குழந்தையின் சிறுநீரகத்திற்கு ரூ.10 ஆயிரமும் நிர்ணயித்து இருக்கிறார். தனது உடல் உறுப்புகளை விற்றால் கடனை அடைக்க முடியாது என்பதால் தனது குடும்பத்தினரின் உடல் உறுப்புகளையும் விற்பனைக்கு வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். சதீஷ் ஒரு லட்சம் ரூபாய் விவசாய கடன் வாங்கி இருந்தார். தேர்தலுக்கு முன்பு சொன்னபடி கடனை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கூறி முதல்வர் தேவேந்திர பட்னாவிஸிற்கு கடிதம் எழுதி இருக்கிறார். இக்கடிதம் மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அவர் தனது கடிதத்தில் கடனை அடைக்க முடியாது என்பதால் தற்கொலை செய்து கொள்வதை தவிர தனக்கு வேறு வழியில்லை என்றும், தன்னிடம் இருக்கும் இரண்டு ஏக்கர் நிலத்தில் போதிய மகசூல் மற்றும் விலை கிடைக்காத காரணத்தால் விவசாயம் செய்ய வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் விவசாயிகளுக்கு அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு ரூபாய் விவசாய காப்பீடு திட்டத்தை ரத்து செய்வது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருகிறது. இத்திட்டத்தில் மோசடி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருப்பதால் ஒரு ரூபாய் காப்பீடு திட்டத்தை ரத்து செய்ய அரசு பரிசீலித்து வருகிறது.

மேற்கு வங்கம்: மம்தா பானர்ஜி நியமித்த 25,000 ஆசிரியர்கள் டிஸ்மிஸ்; உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஆசிரியர் நியமனத் தேர்வுமேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அரசு 2016ம் ஆண்டு பள்ளிகளில் 25 ஆயிரம் ஆசிரியர்களைத் தேர்வு நடத்தித் தேர்ந்தெடுத்து பணியில் நியமித்தது.ஆசிரியர் நியமனத் தேர்வுக்காக நடத்தப்பட்ட த... மேலும் பார்க்க

கச்சத்தீவு : `திமுக செய்த தவறால்... தீர்மானம் வெறும் கண்துடைப்பு” - டிடிவி தினகரன் காட்டம்

தேனி மாவட்டம் போடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அமமுக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், ``வாக்குறுதி... மேலும் பார்க்க

வக்ஃப் மசோதா : 'பாஜக-வுக்கு தேவை கடந்த காலத்தின் துர்நாற்றம்' - எம்.பி சு.வெங்கடேசன் காட்டம்

வக்ஃப் திருத்த மசோதா தாக்கல் என்ற பேச்சு எழுந்ததுமே எதிர்க்கட்சிகள் தொடங்கி பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் நேற்று(ஏப்ரல்-2) கடுமையான விவாதத்திற்கு பிறகு, மக்களவையில் வக்... மேலும் பார்க்க

கழுகார் அப்டேட்ஸ் : `பெண்புள்ளி... நாகப்புள்ளி’ - மலர்க் கட்சியின் தமிழக நாற்காலி யாருக்கு?

மோதிக்கொள்ளும் கோஷ்டிகள்!பல்கலைக்கழக `பதவி’ பாலிட்டிக்ஸ்...மான்செஸ்டர் மாவட்டத்திலுள்ள ‘பசுமையான’ பல்கலைக்கழகத்தில், உச்சப் பொறுப்பில் இருந்தவரின் பதவிக்காலம் சமீபத்தில் நிறைவுபெற்றது. அவர், மீண்டும் ... மேலும் பார்க்க

TVK : ஆர்வத்தோடு விஜய்; முட்டுக்கட்டையாக நிற்கும் `பவர்புல்' அணி? - தவெகவில் என்ன நடக்கிறது?

'பனையூர் அப்டேட்!'மாதத்திற்கு ஒரு நிகழ்ச்சி என நடத்தி திடீர் பேசுபொருளாகி மறைந்து விடுகிறது தவெக. பிப்ரவரியில் ஆண்டு விழா, மார்ச்சில் பொதுக்குழுக் கூட்டம் என நடத்தி முடித்தவர்கள், இந்த மாத இறுதியில் ப... மேலும் பார்க்க