செய்திகள் :

₹ 70,000-த்தை நெருங்கும் சவரன் - ஏன் எல்லாரும் தங்கத்தை வாங்கிக் குவிக்கிறாங்க?

post image

சரியா 25 வருஷத்துக்கு முன்னாடி, ஒரு சவரன் தங்கம் விலை ₹3500, இன்னைக்கு ₹ 70,000-த்தை நெருங்கியாச்சு! கடந்த 25 வருடங்கள்ல கிட்டத்தட்ட 20 மடங்கு வளர்ச்சி. நீங்க அப்போ 1 லட்ச ரூபாய்க்கு தங்கம் வாங்கி வச்சிருந்தா இன்னைக்கு உங்க கைல ₹ 20 லட்சம் இருந்துருக்கும்.

சரி, தங்கம் விலை இனியும் இதேமாதிரிதான் உயரப்போதா? இல்ல அதோட உச்சத்தை தங்கம் தொட்டுருச்சா? நாம ஸ்மார்ட்டா எப்படி தங்கத்தை வாங்கலாம்? பார்ப்போம்....

ஏன் முதலீட்டாளர்களுக்கு தங்கம் ஒரு துருப்புச் சீட்டு?

தங்கம் என்பது ஏதோவொரு முதலீடு கிடையாதுன்னு நாம புரிஞ்சுக்கணும் - அது பொருளாதார சூழ்நிலை சரியில்லாத நேரத்துல நம்மைக் காக்கும் முக்கிய அரண். அதனாலதான் பெரிய பணக்காரங்களும், மத்திய வங்கிகளும் தங்கத்தை வாங்கி இருப்பில் வெச்சுக்குறாங்க. உலகப் பொருளாதாரத்தில் கலக்கம் ஏற்படும்போதெல்லாம் அது நிலைத்தன்மையை கொடுக்கும்.

தங்கம் ஏன் ஒரு ஸ்மார்ட்டான முதலீடு?

* பணவீக்கத்துக்கு மாற்று: எப்போதெல்லாம் ஒரு நாட்டின் பண மதிப்பு குறையுதோ, அப்போ தங்கம் மக்களுக்கு கைகொடுக்கும். விலைவாசி ஏறும் சமயத்துல, நம் வாங்கும் சக்தியை அது பாதுகாக்கும்.

* பிரச்னை நேரத்தில் உதவி: போர், பொருளாதார பின்னடைவு, அரசியலில் நிச்சயமற்ற சூழ்நிலை, இந்த சமயத்தில் எல்லாம் தங்கத்தின் விலை கண்டிப்பாக விலை அதிகரிக்கும்.

* அதிக தேவை, அளவான கையிருப்பு: அரசாங்கம் பணத்தை நினைச்சா அச்சிடலாம் (ஆனா அப்படியெல்லாம் பண்ணக்கூடாது), தங்கத்தை நாம நினைச்சாலும் உருவாக்க முடியாது. குறிப்பிட்ட அளவு மட்டுமே கிடைக்கும் பொருளுக்கு எப்போதுமே மதிப்பு அதிகம்.

* உலகத்தில் எங்கும் செல்லும்: நீங்க எந்த நாட்டுக்கு போனாலும் தங்கத்தை கொடுத்து, அந்த நாட்டின் பணத்தை வாங்கலாம், இதுதான் தங்கத்தின் மிகப்பெரிய ஆற்றல்.

gold
தங்கம் - gold

இனி தங்கம் விலை அதிகரிக்குமா?

ஏப்ரல் 2, 2025, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை $3,118.29-யாக அதிகரிச்சு இருக்கு. உலகளாவிய பொருளாதார பின்னடைவு, அமெரிக்காவின் வர்த்தக கொள்கைகளில் மாற்றம், இதனால ஏற்படும் உலகளாவிய பதற்றமெல்லாம் தங்கம் விலை அதிகரிக்க காரணம். இன்னும் சில மாதங்களில் அவுன்ஸ் தங்கம்  $3,300+ வரை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் சொல்றாங்க.

சரி, ஏறும் தங்கம் இறங்குமா?

தங்கம் விலை தொடர்ந்து ஏறினாலும். அதிகரித்து வரும் வட்டி விகிதம் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு காரணமாக அப்பப்போ சில நேரம் தங்கம் விலை குறைய வாய்ப்பிருக்கு.  ஆனா வரலாறு சொல்வது ஒண்ணுதான், எப்போதும் தங்கத்தின் விலை அதிகரிக்கவே செய்யும். கடந்த 25 ஆண்டுகளே அதுக்கு சாட்சி. அடுத்த 25 வருடமும் இதையே நாம எதிர்பார்க்கலாம்.

gold - தங்கம்

ஸ்மார்ட்டா தங்கம் வாங்குவது எப்படி?

* நகை/நாணயம்/கட்டி: இது எப்பவும் நாம் தங்கத்தை வாங்கி வைக்கும் முறை. இதில் பத்திரமா தங்கத்தை சேமிச்சு வைப்பது ஒரு சவால்.

* கோல்டு மியூச்சுவல் ஃபண்ட்ஸ் & ETF: நேரடியாக தங்கத்தை வாங்கி சேமிக்க முடியாதுன்னு சொல்றவங்க, தங்கத்தில் முதலீடு பண்ணும் மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் ETF-களை வாங்கலாம்.

* டிஜிட்டல் தங்கம்: தங்கத்தை டிஜிட்டல் ஆப்ஸ் மூலம் வாங்கி விற்கலாம். இதில் சில நிறுவனங்கள் டிஜிட்டலாக வாங்கிய தங்கத்தை கட்டிகளாக மாற்றிக்கொள்ளும் வாய்ப்பைக் கொடுக்குறாங்க,

* தங்கத்தை மையமாக வைத்து செய்லபடும் பங்குகள்: தங்க நகை நிறுவனங்கள், தங்க நகைக் கடன் நிறுவனங்கள், தங்கத்தை அகழ்ந்தெடுக்கும் நிறுவனங்களின் மதிப்பு, தங்கம் மதிப்பு உயர உயர அதிகமாகும். இந்த நிறுவனங்களோட பங்குகளையும் நாம் வாங்கலாம்.

நீங்க தங்கத்தில் முதலீடு செய்யணுமா? இந்த வெபினார் மிஸ் பண்ணிடாதீங்க!

தங்கம் என்பது வெறும் வளரும் முதலீடு மட்டுமில்ல அது பொருளாதார பாதுகாப்பை அதிகப்படுத்தும் கருவின்னு புரிஞ்சிருக்கும். தற்போது பங்குச் சந்தைல வீழ்ச்சி இருக்கறதை பார்க்க முடியுது, இதனால் தங்கம் விலையும் கிடுகிடுன்னு ஏறிக்கிட்டு இருக்கு. முதலீட்டாளர்கள் இந்த வாய்ப்பை சிறப்பா பயன்படுத்தி வர்றாங்க.

gold - தங்கம்

நீங்களும் இதேமாதிரி ஸ்மார்ட்டா தங்கத்தை வாங்கி, சிறப்பான லாபத்தை பார்க்கணுமா? உங்களுடைய வருங்காலத்தை பாதுகாக்க உங்க கையில நிறைய தங்கம் இருக்கணும்னு நினைக்கிறீங்களா? தங்க முதலீடுகளை எங்க, எப்படி பண்ணனும்னு தெரியனுமா? விகடன் 'லாபம்' வழங்கும் 'தங்கத்தின் வருங்காலம்' சிறப்பு வெபினாரில் கண்டிப்பாக கலந்துக்கோங்க.

நாள்: ஏப்ரல் 6, 2025, ஞாயிறு

நேரம்: காலை 11 - 12.30 மணி

பேச்சாளர்: என். சண்முகநாதன், முதலீட்டாளர் & பொருளாதார நிபுணர், எழுத்தாளர் - RIP USD 1971 - 202X புத்தகம்

150 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. முன்பதிவு கட்டாயம்.

முதலில் பதிவு செய்யும் 100 பேருக்கு, '100 கிராம் தங்கம் சேர்ப்பதற்கான புளூபிரின்ட்' இமெயில் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

ரெஜிஸ்ட்ரேஷன் லிங்க்: https://forms.gle/uvk3ywD8cXoc6qtR6 

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Vikatan Whatsapp Channel

'வருமான வரி முதல் ஆதார் கார்டு வரை' - இன்று முதல் அமலுக்கு வரும் 7 நிதி அறிவிப்புகள்!

இன்றிலிருந்து 2025-26 புதிய நிதியாண்டு தொடங்குகிறது. அதன் ஒரு பகுதியாக, இன்றிலிருந்து பல அறிவிப்புகள் நடைமுறைக்கு வர உள்ளது. அவை என்ன என்று பார்ப்போம். முதல் மற்றும் முக்கிய அறிவிப்பு என்னவென்றால் கடந... மேலும் பார்க்க

உங்கள் பணத்திற்கு நீங்கள் 'எஜமானி'யாக 12 கோல்டன் ரூல்ஸ்!

கையில் கொஞ்சம் காசு இருந்தால், நீதான் அதற்கு எஜமானி; கழுத்து வரைக்கும் காசு இருந்தால், அதுதான் உனக்கு எஜமானன்...இந்தப் பாட்டு ஞாபகமிருக்கிறதா...'இந்தப் பாட்டை மறக்க முடியுமா? இது நம்ம தலைவர் பாட்டே' எ... மேலும் பார்க்க

பணம் சேர்க்கும் ரகசியத்தை தெரிஞ்சுக்கணுமா? மியூச்சுவல் ஃபண்ட் அடிப்படை வெபினார்

நீங்க கஷ்டப்பட்டு, லிட்டர் கணக்குலவேர்வைசிந்தி சம்பாதிச்சபணம், பேங்க் சேவிங்ஸ்அக்கவுண்ட்ல, ஏ.டி.எம் நைட் வாட்ச்மேன் மாதிரி தூங்கிட்டு இருக்கா? நிதிச் சுதந்திரம்அடையணும்னுநினைக்கிறீங்க, ஆனா முதலீடுன்னா... மேலும் பார்க்க

நாணயம் விகடன்: முதலீட்டுத் திட்டங்களைச் சரியாகத் தேர்ந்தெடுப்பது எப்படி?

நாம் முதலீடு செய்யும் போது, நம் இலக்குகளை நிர்ணயம் செய்து கொண்டு முதலீடு செய்ய வேண்டும். அப்போது அதற்காக முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்வோம்.ஒவ்வொரு முதலீட்டுத் திட்டமும் சாதக பாதகங்களைக் கொண்டிர... மேலும் பார்க்க