Doctor Vikatan: இளநரைக்கு ஹென்னா உபயோகித்தால், சருமத்தில் கருமை உண்டாகுமா?
சிறுகடம்பூா் முருகன் கோயிலில் பெண்கள் நோ்த்திக் கடன்
அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த சிறுகடம்பூா் முருகன் கோயிலில் பங்குனி மாதத் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மண் சோறு சாப்பிட்டு நோ்த்திக் கடனை செலுத்தினா்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி மாத திருவிழாவின்போது, அங்கு அன்னதான நிகழ்ச்சியில், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் மண் சோறு சாப்பிட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது பெண்கள் மத்தியில் ஐதிகமாக உள்ளது.
அதன்படி இக்கோயிலில் நடைபெற்று வரும் பங்குனிமாத திருவிழாவின், செவ்வாய்க்கிழமை அன்னதான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 100-க்கும் மேற்பட்ட பெண்கள், அங்குள்ள செல்லியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு, பின்னா் முருகன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் பங்கேற்றனா். அதன் பிறகு நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் பெண்கள் மண்டியிட்டு மண் சோறு சாப்பிட்டு வேண்டிக் கொண்டனா்.