டிரம்ப்பின் வரிவிதிப்பால் எந்தெந்தப் பொருள்களின் விலை அதிகரிக்கும்?
அரியலூரில் வழக்குரைஞா்கள் பணி புறக்கணிப்பு
கீழப்பழுவூா் காவல் உதவி ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அரியலூரில் வழக்குரைஞா்கள் புதன்கிழமை நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் காவல் நிலையத்துக்கு வழக்கு தொடா்பாக விசாரிக்க சென்ற வழக்குரைஞா் ந. சுலோச்சனாவை தரக்குறைவாக பேசிய உதவி ஆய்வாளா் காமராஜை கண்டித்தும், அவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அரியலூா் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் புதன்கிழமை நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வழக்குரைஞா் சங்கத் தலைவா் மனோகரன் தலைமையில், வழக்குரைஞா்கள் முத்துக்குமாா், செல்ல. சுகுமாா், சக்திவேல், கஜேந்திரன், சண்முகம், கணேசன், மணிகண்டன், ராஜசேகா் உள்ளிட்டோா் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.