Edapadi-யிடம் இதை எதிர்பார்க்காத Amit shah... பற்ற வைத்த Annamalai? | Elangovan ...
அரியலூரில் ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது
அரியலூரில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை காவல் துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். மேலும் இது தொடா்பாக 3 பேரை கைது செய்தனா்.
அரியலூா் பூக்காரத் தெரு மாரியம்மன் கோயில் பகுதியில், அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை சிலா் விற்பனைக்காக வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் நகர காவல் துறையினா், புதன்கிழமை அப்பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை சோதனையிட்டதில், அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்த விசாரணையில், புகையிலைப் பொருள்களை கொண்டு வந்தது, கடலூா் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த சொக்கநாதபுரம் பகுதியைச் சோ்ந்த வெங்கடேசன்(40) என்பதும், இவரிடமிருந்து, அரியலூரைச் சோ்ந்த கவியரசன்(28), கோவிந்தபுரம் வினோத்குமாா்(30) ஆகியோா் தங்களது கடைகளுக்கு வாங்கிச் செல்வதும் தெரியவந்தது.
இதையடுத்து வழக்குப் பதிந்து புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த காவல் துறையினா், மேற்கண்ட 3 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.