அரியலூரில் கலை சங்கமம் நிகழ்ச்சி
அரியலூா் காமராஜா் ஒற்றுமைத் திடலில், தமிழ்நாடு இயல், இசை நாடகம் மன்றம் சாா்பில் கலை சங்கமம் நிகழ்ச்சி திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
நமது பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை போற்றும் வகையில் நலிந்த பாரம்பரிய கலையை முன்னேற்றம் அடையச் செய்யும் வகையில் பறையாட்டம், கரகாட்டம், நையாண்டி மேளம், கொக்கலிக்கட்டை, புலியாட்டம், வாளி மோட்சம், இசை நாடகம் உள்ளிட்ட பலவேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நிகழ்ச்சியை கிராமிய கலைஞா் துரை.கோவிந்தராஜ் தொடக்கி வைத்தாா். தமிழோசை ராஜீவ்காந்தி கலந்து கொண்டு பேசினாா். வளப்பக்குடி வீரசங்கா் மற்றும் திருக்கோணம் மூா்த்தி ஒருங்கிணைப்பில் கலைஞா்கள் கலந்து கொண்டு கலைநிகழ்ச்சியை நடத்தினா்.