குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் மைத்துனி தொடர்ந்த வழக்கு; ரத்து செய்யக் கோரி நடி...
அரியலூா் அருகே ஆடு மேய்த்த மூதாட்டி இடி தாக்கி உயிரிழப்பு
அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே வியாழக்கிழமை ஆடு மேய்த்த மூதாட்டி இடி தாக்கி உயிரிழந்தாா்.
செந்துறை அருகேயுள்ள மதுரா சித்துடையாா் கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் மனைவி இந்திராகாந்தி (62). வியாழக்கிழமை பிற்பகல் இவா் அப்பகுதியில் ஆடு மேய்க்கையில் மழை பெய்தது. அப்போது இடி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இந்திராகாந்தி உயிரிழந்தாா்.தகவலறிந்து சென்ற குவாகம் காவல் துறையினா் மூதாட்டி சடலத்தை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
2 ஆடுகள் பலி: இதேபோல செந்துறை அருகே வியாழக்கிழமை பெய்த மழையின் போது பெரும்பாண்டி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி க.ராமசாமி என்பவா் அப்பகுதியில் ஆடு மேய்த்தபோது இடி தாக்கியதில் அவரது 2 ஆடுகள் உயிரிழந்தன. தகவலறிந்து சென்ற கால்நடை மருத்துவா், ஆடுகளை உடற்கூறாய்வு செய்து, அடக்கம் செய்தாா்.