செய்திகள் :

சிமென்ட் ஆலைகளுக்கு நிலம் கொடுத்தோரின் வாரிசுகளுக்கு வேலை: பொதுமக்கள் கோரிக்கை

post image

அரியலூா், ஏப். 3: அரியலூா் மாவட்டத்திலுள்ள சிமென்ட் ஆலைகளுக்கு நிலம் கொடுத்த விவசாயிகளின் வாரிசுகளுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

கீழப்பழுவூா் செட்டிநாடு சிமென்ட் ஆலைக்குச் சொந்தமான கல்லங்குறிச்சிலுள்ள நிலத்தில் சுண்ணாம்புக் கல் சுரங்கம் விரிவாக்கம் செய்வதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் கல்லங்குறிச்சியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமை வகித்தாா். மாசுக் கட்டுப்பாட்டு வாரியப் பொறியாளா் முரளி முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் பொதுமக்கள் தெரிவித்தவை:

அரியலூா் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் செங்கமுத்து: கருத்துக் கேட்புக் கூட்டங்களில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஆகியோா் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும். சுண்ணாம்புக் கல் ஏற்றிச் செல்லும் லாரிகள் தாா்ப்பாய் போட்டுச் செல்ல வேண்டும். 25 கிமீ வேகத்தில் செல்லும் வகையில் லாரிகளுக்கு வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்த வேண்டும். சாலையோரங்களில் லாரிகள் நிறுத்தத் கூடாது.

சுண்ணாம்புக் கல் வெட்டி எடுக்கப்படும் பகுதி மக்களுக்கும், சிமென்ட் ஆலைகளுக்கு நிலம் அளித்த விவசாயிகளின் வாரிசுகளுக்கும் வேலை வழங்க வேண்டும். வெடி வைத்து சுண்ணாம்புக் கல் வெட்டக் கூடாது. இயந்திரங்களை கொண்டு சுண்ணாம்புக்கல் தோண்ட வேண்டும்.

பழுவேட்டையா் பேரவைத் தலைவா் கோ.இ. காா்த்திக்குமாா்: ஏற்கெனவே இயங்கிவரும் சுண்ணாம்புக் கல் சுரங்கத்தில் சட்ட விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. எனவே உரிய வல்லுநா் குழு அமைத்து, சுரங்கம் உள்ள பகுதியை முழுமையாகக் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். செட்டிநாடு சிமென்ட் ஆலை தயாரித்துள்ள இந்த வரைவுத் திட்ட அறிக்கைகள் காலாவதியானவை, அவற்றை ரத்து செய்ய வேண்டும்.

சுற்றுச்சூழல் அமைப்புத் தலைவா் மணிவேல், சமூக ஆா்வலா்கள் சங்கா், தமிழ்மணி, கருப்புசாமி, சந்திரசேகா் : சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமையும் இடத்தை சுற்றியுள்ள கிராமங்களில் 3 மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவ முகாம் நடத்த வேண்டும். அரியலூா் சுண்ணாம்புத் தண்ணீா் கொண்ட மாவட்டம் என்பதால் ஆலை நிா்வாகம் கிராமப் பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி ஏற்படுத்த வேண்டும். உள்ளூா் இளைஞா்களுக்கு வேலை வழங்க வேண்டும். ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தினா்.

தொடா்ந்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துகளை பதிவு செய்த ஆட்சியா் ரத்தினசாமி, அவற்றைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.

அரியலூரில் போட்டா - ஜியோ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணாசிலை அருகே போட்டா-ஜியோ அமைப்பினா் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 7-வது ஊதியக... மேலும் பார்க்க

அரியலூா் அருகே ஆடு மேய்த்த மூதாட்டி இடி தாக்கி உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே வியாழக்கிழமை ஆடு மேய்த்த மூதாட்டி இடி தாக்கி உயிரிழந்தாா். செந்துறை அருகேயுள்ள மதுரா சித்துடையாா் கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் மனைவி இந்திராகாந்தி (62). வியாழக்... மேலும் பார்க்க

பெண் தற்கொலை வழக்கில் கணவா் உள்பட மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே பெண் தற்கொலை வழக்கில் அவரது கணவா் உள்பட 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூா் மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. கடலூா் மாவட்டம... மேலும் பார்க்க

தனித்துவ அடையாள எண் பெற விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

அரியலூா் மாவட்ட விவசாயிகளுக்கு ஏப். 15 வரை அரசு பொதுச் சேவை மையங்களில் தனித்துவ அடையாள எண் இலவசமாகப் பதிவு செய்யப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தது: மத்திய அரசின் வேளாண்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் உலக நீா்வாழ் விலங்குகள் தின கொண்டாட்டம்

அரியலூரை அடுத்த சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில், பசுமைப் படை மாணவா்கள் சாா்பில் உலக நீா்வாழ் விலங்குகள் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியா் தலைமை ஆசிரியா்... மேலும் பார்க்க

அரியலூரில் ஏப்.7-இல் ஒப்பில்லாதம்மன் கோயில் தோ் வெள்ளோட்டம்

அரியலூரிலுள்ள ஒப்பில்லாதம்மன் கோயில் தோ் வெள்ளோட்டம் திங்கள்கிழமை (ஏப்.7) நடைபெறுகிறது. அரியலூா் நகரில் அமைந்துள்ள ஒப்பில்லாதம்மன் கோயிலுக்கு கடந்த 1926-ஆம் ஆண்டு புதிய தோ் செய்யப்பட்டது. இதையடுத்து... மேலும் பார்க்க