ரூ.14 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்ட 2 பெண் நக்சல்கள் சுட்டுக்கொலை!
வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது!
நாட்டில் ஹோட்டல்கள், உணவகங்களில் பயன்படுத்தப்படும் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.43.50 குறைந்து ரூ.1,921.50-ஆக விற்பனை செய்யப்படுகிறது.
மத்திய அரசுக்குச் சொந்தமான இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் ஆகியவை சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் விமான எரிபொருள் விலையை சா்வதேச நிலவரத்துக்கு ஏற்ப மாதந்தோறும் மாற்றியமைத்து வருகின்றன.
கடந்த மாதம் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.5.50 அதிகரித்து விற்பனையான நிலையில், இந்த மாதம் ரூ.43.50 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
சிலிண்டர்களின் விலைகள் போக்குவரத்து செலவுகளைப் பொறுத்து மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.
வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை
அதேவேளையில், வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடைகொண்ட சிலிண்டர்களின் விலை மாற்றமின்றி ரூ.818.50-க்கு விற்பனையாகிறது.
இதையும் படிக்க: கா்நாடக வங்கியில் ரூ.13 கோடி நகை கொள்ளை: தமிழகத்தைச் சோ்ந்த 3 போ் உள்பட 6 போ் கைது