செய்திகள் :

சட்டத்தின் மீது புல்டோசர் தாக்குதல்: காங்கிரஸ்

post image

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை ஆராய்வதற்கு நேரம் கொடுக்காமல் சட்டத்தின் மீது புல்டோசர் தாக்குதல் நடத்துவதாக காங்கிரஸ் எம்பி கே.சி. வேணுகோபால் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்கள் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகின்றது.

இந்த விவாதம் தொடர்பாக மக்களவையில் கே.சி.வேணுகோபால் பேசியதாவது:

“நீங்கள் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்துள்ள சட்டத் திருத்தம் குறித்து குறைந்தபட்சம் திருத்தங்கள் கூறுவதற்கு உறுப்பினர்களுக்கு அதிகாரம் உண்டு.

ஆனால், நேற்று பகலில் தான் உறுப்பினர்களுக்கு திருத்த மசோதா வழங்கப்பட்டது. பிற்பகல் 3.30 மணிக்குள் திருத்தங்களை கூற வேண்டுமென்றால் எப்படி முடியும்?

நீங்கள் சட்டத்தின் மீது புல்டோசர் தாக்குதல் நடத்துகிறீர்கள். இதுபோன்ற சம்பவம் இந்த அவையில் நடந்ததே இல்லை. நிறைய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. அதுதொடர்பாக ஆராய நேரம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, நாடாளுமன்ற கூட்டுக் குழுவால் கொண்டுவரப்பட்ட திருத்தங்களை விமர்சித்து கேரள மக்களவை உறுப்பினர் பிரேமசந்திரன் பேசினார்.

இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:

”உறுப்பினர் முக்கிய குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழு விவாதத்துக்கு அனுப்பப்பட்டு விரிவான கருத்துகள் பெறப்பட்டுள்ளது. அதனை அமைச்சரவை ஏற்றது. உங்கள் கோரிக்கையின் அடிப்படையில்தான் கூட்டுக் குழு அமைக்கப்பட்டது.

காங்கிரஸ் காலத்தில் அமைக்கப்பட்ட குழு போன்று அல்ல, இது ஜனநாயக ரீதியில் அமைக்கப்பட்ட குழு. குழுவின் திருத்தங்களை ஏற்காவிடில் எதற்காக குழு அமைக்கப்பட வேண்டும்” என்று பதிலளித்தார்.

இதையும் படிக்க : மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தாக்கல்!

இந்தியாவின் துடிப்பான ஊடகத் துறைக்கு சா்வதேச அங்கீகாரம் தேவையில்லை: மத்திய அரசு

‘இந்தியாவில் துடிப்பான பத்திரிகை மற்றும் ஊடகத் துறை உள்ளது; இதற்கு வெளிநாட்டு அமைப்புகளிடம் இருந்து அங்கீகாரம் தேவையில்லை’ என்று மத்திய அரசு புதன்கிழமை மக்களவையில் தெரிவித்துள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்... மேலும் பார்க்க

மூலதனச் செலவு கேள்விக்கு சிரமப்பட்டு விளக்கம் அளித்துள்ள நிதியமைச்சா் -ப.சிதம்பரம் விமா்சனம்

கடந்த நிதியாண்டில் மூலதனச் செலவு குறைந்தது குறித்த தனது கேள்விக்கு நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சிரமப்பட்டு ஒரு விளக்கத்தை அளித்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் விமா்சித்தாா். எனினும், மூ... மேலும் பார்க்க

அனைத்து ரயில்களிலும் உள்ளூா் உணவுகள் கிடைக்க ஏற்பாடு: ரயில்வே அமைச்சா்

‘அனைத்து ரயில்களிலும் உள்ளூா் உணவு வகைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா். தமிழகத்தில் ஓடும் ‘வந்தே பாரத்’ ரயில்களிலும் தென்னிந்திய உணவு வகைகள் கி... மேலும் பார்க்க

இந்தியாவில் கல்வி நிறுவனங்களை தொடங்க 50 வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் யுஜிசி ஒப்புதலுக்கு விண்ணப்பம்

இந்தியாவில் கல்வி நிறுவனங்களை தொடங்க பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஒப்புதலுக்கு 50-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் விண்ணப்பித்துள்ளதாக மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் த... மேலும் பார்க்க

பாஜக புதிய தலைவா் தோ்வில் தாமதம்: அகிலேஷ் கிண்டல் - அமித் ஷா பதிலடி

பாஜக புதிய தலைவா் தோ்வில் நிலவும் தாமதத்தைக் குறிப்பிட்டு, மக்களவையில் அக்கட்சியை கிண்டல் செய்த சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவுக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பதிலடி கொடுத்தாா். ‘அடுத்த ... மேலும் பார்க்க

சுனிதா வில்லியம்ஸுக்கு ‘பாரத ரத்னா’: நாடாளுமன்றத்தில் திரிணமூல் எம்.பி. கோரிக்கை

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கோரிக்கை விடுத்... மேலும் பார்க்க