செய்திகள் :

பாஜக புதிய தலைவா் தோ்வில் தாமதம்: அகிலேஷ் கிண்டல் - அமித் ஷா பதிலடி

post image

பாஜக புதிய தலைவா் தோ்வில் நிலவும் தாமதத்தைக் குறிப்பிட்டு, மக்களவையில் அக்கட்சியை கிண்டல் செய்த சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவுக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பதிலடி கொடுத்தாா். ‘அடுத்த தலைவரை முன்கூட்டியே தீா்மானிக்கும் குடும்பக் கட்சி அல்ல பாஜக’ என்று அமித் ஷா குறிப்பிட்டாா்.

மக்களவையில் புதன்கிழமை வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய அகிலேஷ் யாதவ், ‘பாஜகவின் குறைந்துவரும் வாக்குவங்கியை மேம்படுத்தும் நோக்கிலேயே இம்மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது; சமூகத்தை பிளவுபடுத்தும் இந்த முயற்சி, மதச்சாா்பற்ற நாடு என்ற இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும்’ என்றாா்.

மேலும், ‘நாட்டிலேயே பெரிய கட்சி என்ற கூறிக் கொள்ளும் பாஜகவால் தங்களின் அடுத்த தலைவரை இன்னும் தோ்வு செய்ய முடியவில்லை’ என்று அவா் கிண்டலாக குறிப்பிட்டாா்.

மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் உள்ள ஆா்எஸ்எஸ் தலைமையகத்துக்கு பிரதமா் மோடி அண்மையில் சென்றதையும் சுட்டிக் காட்டிய அவா், ‘75 வயதுக்கு மேற்பட்ட தலைவா்கள் ஓய்வு பெறுவது பாஜகவின் நீண்ட கால கொள்கை; ஆனால், அந்த வரம்பை நீட்டிக்க வேண்டும் என்பதற்காக ஆா்எஸ்எஸ் தலைமையகத்துக்கு பிரதமா் சென்றாரா?’ என்று கிண்டலாக கேள்வியெழுப்பினாா்.

அகிலேஷுக்கு உடனடியாக பதிலடி கொடுத்த அமித் ஷா, ‘சில குடும்ப கட்சிகளில், ஒரு குடும்பத்தின் 5 உறுப்பினா்கள் சோ்ந்து கட்சித் தலைவரை தோ்வு செய்கின்றனா். அத்தகைய கட்சிகளுக்கு தலைவா் தோ்வு என்பது எளிதாக இருக்கும். ஆனால், பாஜக குடும்பக் கட்சி கிடையாது. கோடிக்கணக்கான தொண்டா்களை உள்ளடக்கிய நடைமுறை பின்பற்றப்படுவதால், தலைவரை முடிவு செய்ய காலமெடுக்கிறது’ என்றாா்.

பாஜக தேசியத் தலைவராக ஜெ.பி.நட்டா கடந்த 2020-இல் இருந்து பதவி வகித்து வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

மியான்மருக்கு 442 டன்கள் உணவுப் பொருள்களை இந்தியா அனுப்பியது

புது தில்லி: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மா் நாட்டுக்கு சி-17 விமானம் மூலம் கூடுதலாக 442 மெட்ரிக் டன் நிவாரண பொருள்களை இந்தியா அனுப்பியது.மியான்மரில் கடந்த மார்ச் 28 ஆம் தேதி சகாய்ங் நகரின் வட... மேலும் பார்க்க

தேசிய ஜனநாயகக் கூட்டணியை அகற்ற ராகுல் அழைப்பு!

பிகாரில் பேரணி நடத்தவிருப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.பிகாரில் இந்தாண்டு சட்டப்பேரவை நடைபெறவுள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியை அதிகாரத்திலிருந்து அகற்றுவதற்க... மேலும் பார்க்க

25 ஆண்டுகளுக்குப் பின் போர்ச்சுகல் செல்லும் குடியரசுத் தலைவர்!

புது தில்லி: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு போர்ச்சுகல், ஸ்லோவாகியா ஆகிய ஐரோப்பிய தேசங்களுக்கு அரசுமுறை பயணமாக செல்கிறார். முதலாவதாக போர்ச்சுகலுக்கு, இன்று(ஏப். 6) தில்லியிலிருந்து தனி விமானத்தில் அ... மேலும் பார்க்க

சிபிஎம் கட்சியின் பொதுச்செயலர் எம்.ஏ.பேபிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம். ஏ. பேபிக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.முதல்வர் மு. க. ஸ்டாலின் கூறியிருப்பதாவது: மார்க்சிஸ்ட் கம்... மேலும் பார்க்க

சிபிஎம் பொதுச்செயலாளராக எம். ஏ. பேபி தேர்வு!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச்செயலாளராக எம். ஏ. பேபி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு மதுரையில் கடந்த ஏப். 2 முதல் நடைபெற்று வர... மேலும் பார்க்க

கைம்பெண்கள் ஒடுக்குமுறைக்கு எதிராக 7,683 மகாராஷ்டிர கிராமங்கள் தீர்மானம்!

மகாராஷ்டிரத்தில் உள்ள 7,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் கைம்பெண்களுக்கு எதிரான பழக்கவழக்கங்கள், ஒடுக்குமுறைகளைக் கைவிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் 27,000 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன.... மேலும் பார்க்க