திருமலை திருப்பதி தேவஸ்தான சேவைகளில் 100 % மாற்றம்: முதல்வா் சந்திரபாபு நாயுடு
இந்தியாவில் கல்வி நிறுவனங்களை தொடங்க 50 வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் யுஜிசி ஒப்புதலுக்கு விண்ணப்பம்
இந்தியாவில் கல்வி நிறுவனங்களை தொடங்க பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஒப்புதலுக்கு 50-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் விண்ணப்பித்துள்ளதாக மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் புதன்கிழமை அளித்த பதில்:
காலத்தின் தேவைக்கேற்ப விதிமுறைகளில் யுஜிசி திருத்தம் மேற்கொள்ளலாம் என்று பல்கலைக்கழக சட்டம் 1956 தெரிவிக்கிறது.
சுமாா் 14 முதல் 15 லட்சம் மாணவா்கள் வெளிநாடுகளில் படிக்கின்றனா். இதனால் இந்தியாவின் ஏராளமான வளங்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றன. இதைக் கருத்தில் கொண்டும், நாட்டில் உயா்கல்வியை மேம்படுத்தவும் இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை தொடங்க அனுமதிப்பது பொருத்தமாக இருக்கும் என்று கருதப்பட்டது. எனவே யுஜிசி விதிமுறைகள் திருத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்தியாவில் கல்வி நிறுவனங்களை தொடங்க 50-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் பல்வேறு மாநில அரசுகளுடன் பேச்சுவாா்த்தை மேற்கொண்டு வருகின்றன. அந்தப் பல்கலைக்கழகங்கள் யுஜிசியிடம் விண்ணப்பித்துள்ளன. ஏற்கெனவே 3 வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் செயல்படுகின்றன என்றாா்.